138 மெய்ப்படும் வெயர்வை சிந்த விலங்கல்விட்டு அகன்று போனார். உமறு தரும் இவ்வுயர் தமிழ்ப் பாடல்களைப் பொருள் தேர்ந்து படித்து ஓர்ந்து சிந்திக்கின், நம்பிக்கையாளர் கள் அடைகின்ற வெற்றியின் ரகசியம் புரியும். சிலந்தியை யும், சிறுபறவையையும் கொண்டு, இறைவன் நடத்தியுள்ள திரு அருள் பாங்கு தெளிவாகும். கொல்லுக்குச் சொல், வரிக்கு வரி விமர்சனம் செய்யின், பாடல்களின் சிறப்புத் தேனெனத் தெவிட்டாத இன்பம் நல்கக் காணலாம். பாடல் கள் என்பன வெறும் வார்த்தை ஜாலங்கள் அன்று, எதுகை மோனைகளென்ற யாப்பு அணிகளுமன்று, பாடல்கள் தருகின்ற. பாநயம் சிறக்கச் செய்யும் பொருள் நயமே பாடல்களின் கிறப்பு என்பதையும் புரிந்து மகிழ முடியும். இறவாச் செய்தி களை, என்றும் எவரும் ஏற்கும் இனிய கருத்துக் கருவூலங் களை, தன்னுள்ளே தேக்கி நிற்பதே பாட்டாகும். அதனால் தான், பாட்டிற்குச் செய்யுள் என்று பெயர். இத்தகு சிறப் புடைய பாடல்களைச் சீருப்புராணம் முழுவதிலும் காண்கின் றோம். இங்கேயும் இவ்வரிய பாடல்களாலும் கண்டு களிக் கின்றோம். செழிக்கட்டும் செந்தமிழ்ப்பா நல்கும் பாவாணர்கள்!
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/138
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை