பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். 140 தௌர்மலைக் குகையில் அழுபக்கர் சித்திக்தம் மடியில் தலைவைத்து படுத்துறங்குகின்றார்கள் நபிகள் நாயகம் அவர் மலைக் குகையினுள் உள்ள பொந்தின் வழியே, ஒரு பாம்பு தலையை நீட்டுகின்றது. வெளியில் வந்தால் நாயகத் திருமேனி அவர்களைத் தீண்டிவிடுமே என்ற அச்சத்தில், துடையை அசைக்காமல், தமதுமேல் துண்டைக் கிழித்து, அப் பொந்தினை அடைகின்ருர்கள். ஆனால், அப்பாம்பு அருகிலி ருந்த அடுத்த பொந்தின் மூலம் வெளிப்பட முயல்கின்றது. அப்பொந்தினையும் முன்போன்றே அடைகின்றார்கள். இவ் வாறே அக்குகையிலுள்ள பொந்துகள் தோறும் தலைநீட்டவும், துணிகொண்டு அடைக்கவுமாக, பாம்புக்கும் அபூபக்கர் சித்தீக் அவர்கட்குமாக நடந்த போட்டியில், ஒரு பொந்து மிச்சம் உள்ள நிலையில் அபூபக்கர் சித்தீக் அவர்களிடமிருந்த துணி தீர்ந்து விடுகின்றது. எஞ்சிய பொந்தினூடே பாம்பு தலையை நீட்டுகின்றது. அடைக்கத் துணியில்லா நிலையில், தமது கால் களில் ஒன்றை நீட்டி, பாதத்தினால் அப்பொந்தினை அடைத் தார்கள் அபூபக்கர் சித்திக் அவர்கள். கோபமுற்ற பாம்பு சித்திக் அவர்களின் பாதத்தைக் கொத்திக் குதறி விடுகின்றது. விஷம் தலைக்கேற, மயங்கிய நிலையில், சித்திக் அபூபக்கர் இருக் கும்போது, நபிகள் நாயகம் அவர்கள் விழித்தெழுகின்றார்கள். மயக்கமுற்ற நிலையிலுள்ள தமது தோழரை நோக்கி விளவு கின்றார்கள். நடந்த விதத்தை விளக்கி உழைக்கின்றார்கள் சித் தீக அவர்கள். தம் தோழருக்குச் சிகிச்சை நல்கிவிட்டுப் பொந்தினுள் இருக்கின்ற பாம்பை அழைக்கின்றார்கள் நபிகள் தாயகம் அவர்கள், பாம்பு வருகின்றது. அதனிடம் கேட்கின் றார்கள் நாயகம் அவர்கள் தமது அருள் ததும்பும் வாய்திறந்து. பாம்பே, உனக்கு நாங்கள் என்ன தீங்கிழைத்தோம்? அல்லது எங்களின் முன்னோர்களில் யாரேனும் உனக்கோ உனது முன் னோர்கட்கோ தீங்கிழைத்ததுண்டா? எத்தீங்கும் செய்யா நிலை யிலுள்ள எங்களுக்கு ஏன் நீ தீங்குபுரிந்தனை? தீங்கிழைக்கின்ற மனிதர்களிடம் இருந்து தப்பி, மனிதர்கள் அற்ற இவ்விடத் திற்கு வந்தோம். தீத்திறம் புரியும் மனிதர்களையொப்ப,