தீதுறக் கொடிய வேகம் 142 தலைக்கொளச் சினந்து சீறி வேதனைப் படவாய் வைத்தது என்என விரைவில் கேட்டார். "வேதப் பொருளாக ளிளங்குகின்ற இறைவன் படைப்பில் நீயொன்று; நாங்களும் அவனால் படைக்கப்பட்டவர்களே! நமக்குள் பகை இருக்கக் காரணம் இல்லையே! நாங்கள் உனக் குத் தீங்கிழைத்தால் நீ எங்களுக்குத் தீங்கிழைக்கலாம். அல் லது எமது முன்னோர்கள் செய்திருப்பினும் செய்யலாம். ஏது மில்லா நிலையில், மனிதரைப் போன்று நீதியில்லாச் செயலைச் செய்துள்ளனையே, குற்றமற்ற மனிதனுக்கு, நீதியற்ற முறை யிலே, தீதிழைத்து மகிழ்கின்ற மனிதருண்டு உலகிலே, ஊர் வனவற்றுள் ஒன்றாகிய உனக்கு எப்படி அக்குணம் வந்தது என நபிகள் நாயகம் அவர்கள் கேட்ட பாங்கினை, அப்படியே உமறு பாட்டாகத் தந்துள்ள திறம் நினைந்து மகிழ்ந்து போற் றத்தக்கதாம். இனி, பாந்தழ் பகர்வதைக் காண்போம்! மறைநபியின் வாயுரை கேட்டு அவர்கள்தம் எழில் முகத்தை நோக்கி, அப்பாம்பு உரைபகரலாயிற்றெனத் தம் பாடலைத் துவக்குகின்றார் உமறுபுலவர். 'இதிலிருந்து இறை வன் படைப்பில், உயிரினங்கள் அனைத்தும் சமம்' என்னும் நாயகத் திருமேனி அவர்களின் உரை அவர்கள்தம் உரை மட்டுமன்று; திருமறையாகிய குர்ஆனின் உரையுமாகும் என்பதையும் நமக்கு உமறு உணர்த்துகின்றார் என ஆகின்றது பாம்பு, நாயகம் அவர்களின் வாயுரை கேட்டு அவர்கள்தம் எழின் முகம் நோக்கி, சிரம் தாழ்த்தி உரைகின்றது-, "ஆதி நாயகன் திருநபியே! அடியேன் நீதியின்றித் தீண்டினன்அலன், பூதரத்தில், என்முன்னோர், சிலமொழி புகன்றார். பொருவிலாக் கடல் புவி நடு மக்கமாபுரத்தில், அரிய நாயகனின் திருமறையை விளக்கி, அங்கிருந்து, நாயகத்திருமேனியார், இவ்வரையினிடை தனிவருகுவர் என்ன வும், மதீனாத் திருநர் சென்று, அங்கிருந்து தீன்திருத்துவர் எனவும், கூறினர். அவருரைத்த,
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/142
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை