பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 7 நாயகம் அவர்கட்கே என்றும் கண்டு கொண்டான். 'உங் களைக் கண்டதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்' என் றன்; சத்தியமும் செய்தான். உங்கள் அரசு அமையுங்கால், எனக்குப் பரிசு வழங்குதல் வேண்டும் என்று வேண்டினுன், அதையும் எழுத்து மூலமாகக் கேட்டான். 'தாங்கள் செல் வதை நான் யாரிடமும் சொல்லாமலிருக்க இப்பரிசின் ஆசை நெஞ்சில் பதிய வேண்டும்' என்ருன். அவன் விரும்பிய வாறு எழுதி வழங்குமாறு அபூபக்கர் சித்தீக் அவர்கட்குக் கட்டளை யிட்டார்கள் நாயகத் திருமேனி அவர்கள். தம் கோரிக்கையை எழுத்து மூலமாகப் பெற்றதையும், நபிகள் நாயகத்தைச் சந்தித்ததையும் பிறரிடம் வெளியிடாமல் தன் மனத்தகத்தே மறைத்து வாழ்ந்தான் மக்கமா நகர் திரும்பிய சுருக்கத் என் பான். நபிகள் நாயகம் அவர்கட்குப் பின்பு இரண்டாவது கலிபாவாக வந்த உமறுகத்தாப் ரலியல்லாஹ் ஆட்சிக் காலத் தில் அவன் கோரிய பரிசு பொற்கடகங்களாக அவனுக்குக் கிட்டிற்று. சுருக்கத் சென்றபின், நாயகமும் அபூபக்கர் சித்தீக்கும் பல நாட்கள் பசித்துன்பமும் பயணத்தால் ஏற்பட்ட களைப்பும் தவிர்த்து வேறு துன்பமின்றி மதீனமாநகரம் சென்று சேர்ந் தார்கள். இதுவரை நாம் கண்டது சீறாப்புராண காவியத்தின் சுறாக்கத் தொடர்ந்த படலமாகும். அடுத்து நபிகள் நாயகம் அவர்கள் மதீனமாநகர் புக்க படலம் காண்குவமாகப்