பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற சிறப்புடன் திகழ்கிறது என்று அவர்கள் ஒரு வழக்குரை ஞரின் வல்லமையோடு எடுத்தியம்பும்போது, நாம் அவர்களின் சொல்லாட்சியிலும், கருத்துப் பெருக்கிலும் திளைத்து நிற் கிறோம். வானொலி கேட்கும் பல்வேறு மனத்தவருக்கும், மதத்தவருக்கும் சீறாப் பயனளிக்க வேண்டும் என்ற பெரு நோக்கோடு அவர்கள் செய்துள்ள இப்பேராய்வு முஸ்லிமல்லாத சோதரர்களையும் பெருமளவில் தம் பால் ஈர்க்கும் எனத் துணியலாம். இலக்கியம் என்பது வெறும் கலா ரசனைக்காக மட்டும் படைக்கப்படுவதல்ல: அந்த இலக்கியத்தைப் பயில்வோரின் மன வளத்தையும் அது செழுமைப்படுத்தவேண்டும். அந்த நோக்கோடு பார்க்கும்போது நபிகள் பெருமானாரின் ஒழுக்க. நெறிமிக்க உயர்வாழ்வு, சீருவைக் கருத்தூன்றிப் படிப்போ ரைக் கவரும்; அவர்கள் செவ்வழி நடக்கத் தூண்டும். அந்த வகையில் நம் இளைஞர்களுக்கு இது அளப்பரும் நன்மை பயக்க வல்லது எனத் திடமாகக் கூறலாம். பள்ளிச் சாலைகளிலும், கல்லூரிகளிலும் ஒழுக்க இயல் பற்றி போதிக்கவேண்டும் என்று இன்று பரவலாக உணரப்பட்டு வருகின்றது. அந்நிலை ஏற்படும்போது தமிழில் அதற்கான தலையாய பாடம் புத்தகமாக அமையும் தகுதி இந் நூலுக்குளது. ஒழுக்க இயலை, நபிகள் பெருமானாரை அழகிய முன் மாதிரியாகக் கொண்டு அவர்கள்தம் திருவாழ்வை நிலைக் களனாக க வைத்து அழகு தமிழில் அருமையாக எடுத்துக் கூறும் இச்சிறப்பு நூல் கலைமாமணியவர்களுக்கு ஒரு வெற்றி நூல் என்றுகூறி அமைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்! 15, லெப்பை தெரு சென்னை-600016: 17, ஸபர், 1401, 27, டிஸம்பர், 1980. $ M. அப்துல் வஹ்ஹாப்