பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ஆகவே "மதீனா மாநகரம்", நபிகள் நாயகம் அவர்களால் புதிப்பிக்கப்பெற்ற இஸ்லாமியர் அல்லது இஸ்லாமிய மார்க்கம் உறையும் நகரம் என்பதே ஆகும். இப்பொருளில் அம்மாநகரின் சிறப்பினை விளக்கப்போந்த உமறுப்புலவர், இஸ்லாம் என்றால் கான்? என்பதை மிகச் சு சுருக்கி ஒரு பாடலில் தருகின்றார். தானம், ஒழுக்கம்,தவம்,ஈகை,மானம் கெழுமிய மறம். வெற்றி, குறைவற்ற ஊக்கம் உடையதே இஸ்லாம் என்பதை மதீனமாநகரின் மீதேற்றிப் பாடி நினைவுபடுத்துகின்றார், இதில் இன்னொரு சிறப்பு பூ, காய், பழம் என்ற மூன்று சொற் களும் பொருளுடன் பொருந்தி வருமாறு அமைத்துப்பாடி யுள்ளதாம்.ஆம், மானமே பூத்த, ஊக்கம் ஒளிரக் காய்த்த தீன் எனும் இஸ்லாம் மார்க்கம் பழுத்துத் திகழ்கின்ற நகரம் என்று பாடுகின்றார் உமறுப்புலவர். மரம் பழுத்துவிட்டால் மாந்தர் மட்டுமின்றி, பறவை இனங்களும் வந்து கூடிக் கனியருந்திக் களிக்க வேண்டியதுதானே! தீனெனும் கனியை உலகம் அருந்தி மகிழ அளித்த நகரம் என்ற பொருள் அமைத்துப் பாடுகின்றார் புலவர் உமறு. தானமும், ஒழுக்கமும், தவழும் ஈகையும் மானமும் பூத்ததிண்மறனும் வெற்றியும் ஊனமில் ஊககமும் ஒளிரக் காய்த்தநல் தீளெனும் செல்வமே பழுத்த சேண்நகர். இது உமறுப்புலவர் உவந்து வழங்கியுள்ள மதினாநகர் பற்றிய பாடல். இதிலுள்ள சேண்நகர் என்ற சொல்லிற்கு சொர்க்கம் என்பது பொருள் அதாவது பூலோக சொர்க்கம் எனப் பாடிமகிழ்கின்றார், மகிழ்விக்கின்றார் உமறுப்புலவர். அறத்திற்கே அள்புசார்பு என்பர் அறியரர் மறத்திற்கும் அஃதே துணை. என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வரிய வாக்கு உமறுப் போலும்! எனவே ㄓ புலவருக்குப் போதியதாகப்படவில்லை