157 வாகனமும் அற்ற இச்சிறு கூட்டமா நம்மை வெல்லும்?" எனக் கூறிச் சிரித்து மகிழ்ந்தது. பெருமானார் அவர்கள் தமது தோழர்கட்கு உபதேசித்தார்கள்: "நாம் நமது கடமையைச் செய்கிறோம், வெற்றி தோல்வி ஆண்டவன் புறத்தில் உள்ளது. ஆனால், நீங்கள் வலியச் சென்று தாக்கவேண்டாம். அவர்கள் உங்களைத் தாக்கிய பின்னரே நீங்கள் தாக்கவேண்டும். போரிடும்போது, வீர வசனங்களோ, வீண் உரைகளோ, சவால் விடுவது போன்ற பேச்சுக்களோ பேசவேண்டாம். எக்காரணத்தாலும் நின்றநிலை பெயரவேண்டாம். யாரை நாம் ஏற்று வணங்குகின்றோமோ அந்த இறைவன் நமக்கு வெற்றிதருவான், ஊக்கம் தளரவேண்டாம்!” என உபதேசித் துத் தம் தோழர்களை அன்றிரவு, உறக்கத்திற்கனுப்பிவிட்டு, தாயகத் திருமேனி அவர்கள் இரவு முற்றும் விழித்திருத்து பிராத்தனை புரிந்தார்கள். "இறைவனே!என்னுடன் உள்ள இச் சிறு கூட்டம் அழிந்து பட்டால் உருவமற்ற உன்னை வணங்கு வோர் அப்புறம் எவருமில்லை. எனவே, இச்சிறு கூட்டத்திற்கு வெற்றியை நல்கு!" என்பதே நபிகள் நாயகம் அவர்கள்தம் பிரார்த்தனையாக இருந்தது. அவர்களின் பிரர்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான். மறுநாட் காலை போர் ஆரம்பமாயிற்று. ஆயிரம் பேர்கட்கும், முந்நூற்றுப் பதி்ன் மூன்று பேர்கட்கும் இடையே போர்! ஆயுதம் உடையோருக் கும், ஆயுதம் அற்றேருக்கும் இடையே போர்! பயிற்சி பெற்ற பல போர்முனை கண்டோருக்கும், பயிற்சியற்ற கூட்டத்திற்கும். இடையே போர்! அணிவகுத்து நிற்கின்ற தமது படைவீரர்களைக் காண் பதற்கென, அங்கபடியில் கால் ஊன்றிக் குதிரையின்மீது. ஏறினார்கள் நாயகத் திருமேனி அவர்கள். அவர்களைச் சுமந்து நின்ற குதிரையை நம் கண்முன் கொண்டு வருகின்றர் உமறுப்புலவர். தாவிடில் மனத்தையொக்கும்; தாக்கிடில் இடியேனெக்கும். ஏவிடில் திகிரியொக்கும் எதிர்ந்தவர்க்குரியை யொக்கும்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/157
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை