என்னுரை அன்புடைய இலக்கிய நுகர்வாளர்களே! புதுவை வானொலி நிலையத்தில் நான் தொடர்ந்து முப்பத்தோர் தினம் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பு உங்கள் கரங்களிலே! என்னை அழைத்துப் பேசப் பணித்தமைக்கும், என் உரைத். தொகுப்பை நூலாக அமைத்துக் கொள்வதற்கும் அனுமதித்த, புதுவை வானொலி நிலையத்தினருக்கு எனது நன்றியை. நவிலுகின்றேன். அடுத்து, எனது உரையைக் கேட்டு என்னைப் பாராட்டி லிகிதம் வரைந்துள்ள அன்பர்கட்கெல்லாம் நன்றி. இவ்வுரைத் தொகுப்பை நூல்வடிவில் காண உதவிய மதிப்புமிகு சங்கு ஹாஜி K. M. சையத் அப்துல் காதர் அவர் கட்கு இதயம் கனிந்த நன்றி. இந்நூலிற்குப் பல அலுவல்கட்குமிடையேயும் என்பால் அன்பு கொண்டு உரிய காலத்திலே வரவேற்புரையும் அணித் துரையும் தந்துள்ள உயர்திரு. டாக்டர் ந.சஞ்சீவி அவர்கட் கும், ஆவிஜனாப் மௌலவி எம். அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ.பிடி.எச் அவர்கட்கும் மனமார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். " அச்சிட்டு வழங்கிய 'மக்கள் அச்சகத் தாருக்கும் மனநிறை நன்றி. இந்நூல், சீறாகிபுராணம் பற்றிய அறிமுகமேயன்றி, முழுமையானதன்று. இந்நூலில்... விளக்கம் போதாப் பகுதிகள் உ ண்டு. வீளக்காமல் விடுபட்டுப் போன படலங்கள் பல உண்டு. வானொலியில் கிட்டிய நேரத்திற்குள் இவ்வளவே செய்ய வியன்றது.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/16
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை