162 பகைக்கின்ற, எதிர்த்து அழித்தே தீருவதென்கின்ற எண்ணம் மக்கமாநகர வாசிகளின் மனத்திலிருந்து அகலவேயில்லை. இந்தப் போர் முடிந்த அடுத்த ஆண்டு முடியும் முன்னர் மறுபடி யும் அவர்கள் படைகொண்டு போருக்கெழுந்தனர். இடையில் சில சில்லறைப் போர்களை நடத்தினார்கள் என்றாலும், அக்கம் பக்கத்திலுள்ளவர்களையெல்லாம் தூண்டிவிட்டுப் போரிடச் செய்தனர் என்றாலும், அவை எல்லாம் சில்லறைப்போர்களே! முதலில் நடந்த பத்றுப்போருக்குப் பின்னர் எழுந்த பெரும் போர் இதுவேயாம். உகதுப் போர் என்பது இப்போரின் பெயராகும். உகதெனும் மலை அடிவாரத்தில் போர் நடந்த தால் இப்பெயர்வந்தது. உ.கதுமலை மதீனமாநகருக்கு அண்மை யில் உள்ளது. இப்போருக்கு மூவாயிரம் மக்காதகரவாசிகள் தக்கபோர்க்கருவிகளுடனும், குதிரைகள் ஒட்டகங்கள் போன்ற போர்ப்பரணிபாடி ஏறு வாகனங்களுடனும், வீரம் ஊட்டு வதற்கு எனப் பெண்கள் பலருடனும் வந்திருந்தனர். நபிகள் நாயகம் அவர்கள் அணியில்எழுநூறு பேர்களே இருந்தனர். இந்த எழுநூறுபேர்களும் போர்க்களம் நோக்கிச்செல்கின்றனர். குதிரைகளின் மீது இவர்களில் சிலர் சென்றனர். உமறுப்புலவர் பாடுகின்றார். பரவைமாநிலம் சுமந்த வெம்பரிகளை, புரிகள் விரைவின் வேகத்தில்சுமந்தன வேந்தரை, வேந்தர் மருமலர்ப்புயம் சுமந்தன வாட்களை, வாட்கள் பெருகும் ஊன்நிணம் சுமந்தன பிறங்கொளி பிறங்க. நிலம் குதிரைகளைச் சுமக்க, குதிரைகள் வீரர்களைச்சுமக்க, வீரர் கள் வாட்களைச் சுமக்க, வாட்கள் நிணங்களைச்சுமப்பதற்கென விரைந்து சென்று போர்க்களம் உற்றனராம். உமறுவின்பாடல் தருகின்றகாட்சிநயமுடையது. போர் மூண்டது. போர் முனையி லும் தமது பண்புமுறை தவறாத நெறியினரான நாயகத் திரு மேனி அவர்கள், முந்திய போரில் சொன்னது போன்றே இப் போரிலும், "எதிரிகள் வந்துதாக்கினால் ஒழிய நீங்கள்தாக்கக் கூடாது. போர் என்பது தற்காப்பிற்காகவே ஏற்கப்பட வேண்டிய தவிர்க்கமுடியாத ஒன்றாம்' என்று கூறுகின்றார்கள்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/162
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை