பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 எழுநூறு எளிய வீரர்களை மூவாயிரம் அடலேறுகளால் இயலவில்லை; ஆனால், மனமும் திருந்தவில்லை. வள்ளல் நபியை எப்படி மாய்த்து அழிப்பது என்பது பற்றியே கவலையுடன் சிந்திக்கின்றார்கள். முன்னம், அபுஜஹில் ஒரு வனே சிந்திப்பவனாயிருந்தான். இப்பொழுது, அபுசுபியான், இக்ரிமா, காலித்பின்வலீத் என்ற முப்பெரும் தளபதிகள் சிந் திப்பில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் அரபு நாடு முற்றிலும் சுற்றிப் படை திரட்டுகின்றார்கள். இதற்குமுன் பத்று, உகது என்ற இரு இடங்களிலும் நடந்த போர் மக்கத்தில் வசிப்பவர் கட்கும் மதீனத்தில் வசிப்பவர்கட்குமான அரபியர்கட்குள் மட் டுமே நடந்தது. இம்முறை நடைபெற விருக்கின்ற போருக்கு, யூதர்களையும் ஏனையோரையும் முடிந்தவரை திரட்டினார்கள் மக்கா நகர வாசிகள். உமறுவின் பாடல், மக்கா நகரவாசிகள் திரட்டிய படையில் இருந்தோர் யார்யார் எனக் கூறுகின்றது. சுற்றுளவேந்தர் பல்பெருங் குலத்தில் தோன்றிய அரசரும் அவரோடு) உற்றவெம்படையும் பளீகுறை லாவென்(று) ஓதிய மாந்தரும் கபடம் பற்றிய எஹுதி குழுவின ரவரும் பரிவொடு மக்கமா நகரில் தெற்றினர் வளைந்தமுகக்குசை பரியும் செறிந்திடத் திரைக்கடல் சிவண. இப்படி, பலதர மக்களைப் பெரும் அளவில் திரட்டிக்கொண்டு, தம்மை எதிர்க்க மக்கா நகரினர் வருகின்றார்கள் என அறிந் ததும், முன்போலின்றி இம்முறை மதீன மாநகரிலிருந்தபடியே எதிரிகளைச் சந்திப்பது என மாநபியும், நபித்தோழர்களும் முடிவு