168 யின் கணக்குப்படி உமறுவின் கவிதைகளை நவகவிதை எனலாம். விரைந்து மள்ளவர் அவரவர் தனித்தனி மேவி அரிந்துசூழகழ்க் கிடங்கினை அழகுறத் திருத்தி, சொரிந்தநீள்கரைப் புடவியும் வரையெனத் தோன்ற, திருந்தவே அமைத்தனர் குபிர்த்திருந்தவர் திகைப்ப. மூவாயிரம் பேர் ஒன்றுகூடி அகழி தோண்டினர். தோண்டிய அகழி அதனுடைய ஆழத்தாலும் நீண்டு கிடப்பதாலும் கிடங் காயிற்று. அக்கிடங்கின் இரு மருங்கினையும் சுரடுமுறடு அற்ற தாகக் கருவிகொண்டு சுவர் போன்று தெரியுமாறு அழகுறச் செம்மைப் படுத்தினார்கள். இதனை, அரிந்து ஆழகழ்க் கிடங் கினை அழகுறத் திருத்தி என மென்மைதொக்கப் பாடுகின்றார். அகழியின் சுவர்ப் பகுதியை, அரிந்து செம்மைப் படுத்தினர் என்பதிலுள்ள அரிந்து என்னும் சொல் புதிதல்ல வெனினும் இடம் கருதி நோக்கின் புதுமை என்றே கொள்ளல் வேண்டும். கிணற்றின் சுவரையோ, அகழியின் இருமருங்கையுமோ செதுக்குவதை, அல்லது செத்துவதை 'அரிந்து' என உமறு வின் இப்பாடலில்தான் காண்கின்றோம். கறி, காய், பழம் போன்றவற்றையே அரி எனச் சுட்டுவோம். 'அரிவாள், மனை அறிவாள்' என்றியம்பல் இதனை மெய்பிக்கும். அகழியின் இரு மறுங்கினையும் அரித்தார் என்றிருப்பது நயத்தகு சொல்லாட்சி எனலாம். ஆக, எதிரிகள் கண்டு திகைக்கும் வண்ணம் மாநபி அவர்களும் அவர்தம் தோழர்களும் தற்காப்பு நிமித்தம் மதீன. மா நகரில், காப்பாரற்றிருந்தபகுதி முழுமையிலுமாக அகலமும் ஆழமும் உடைய கிடங்கு அகழ்ந்து, அகழ்ந்தெடுத்த மண் ணினைக் கொண்டு நீண்டமலை எனத் தோன்றுமாறு கரை யமைத்து எதிரிகள்வரின், சந்திக்க வாள்கட்கும், வேல் அம்புகட்கும் கூரம் போட்டு வைத்துக் காத்திருந்தனர் என் பதைச் சீருப்புராணத்திலுள்ள கந்தக்குப் படலத்தில் காணு கின்றோம். கந்தக்கு என்பது, 'கந்தக்' என்ற அறபிச்சொல்லின் திரிபாகும். கந்தக் என்ற அரபிச் சொல்லிற்கு அகழ் என்பது' .
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை