பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 பொருள். இப்படலத்தில் எண்பத்து மூன்று பாடல்கள் உள: நபிகள் நாயகம் அவர்கள்தம் வரலாற்றுத் தமிழ் நூல்களில் அகழ்ப் போர் என்ற தலைப்பின் கீழ் உள்ளவற்றை, 'சுந்தக்குப் படலம்' என்றும் 'உயைவந்த படலம்' என்றும் இருபகுப் பாக்கிப் பாடி மகிழ்விக்கின்றார் உமறுப் புலவர், மக்கமா நகரி லிருந்து புறப்பட்ட படையணியில், ஐயாயிரம் குதிரைகள் இருந்தனவென்று வரலாற்ரூசிரியர் கணித்துரைத்துள்ளனர். ஒட்டகப் படை வேறு. அம்பெய்பவர், வேல்வீச்சினர், வாட் படையினர், கவண்கல் படையினரென்று ஐயாயிரத்தவரும் குதிரைப் படையினர் ஐயாயிரத்தவருமாக மொத்தம் பத்தர யிரம் பேர் புறப்பட்டு வந்தனர். இவர்கள் முழுமைக்கும் அபூசுபியான் தலைமை. மக்கத்துப் படையினருக்குக் காலிதிப்னுவலீதும், இக்ரிமாவும் தளகர்த்தர்கள். மற்றப் படைகட்கு, அவ்வுக்குழுவிலிருந்தே தலைவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டிருந்தனர். இப்படி வந்தவர்களில் கத்துபான் கூட்டம் என்றொரு அணி. இந்த அணியினர், போரையே தொழிலாகக் கொண்ட வஞ்சினத்தவர் ஆவர். கண் மண் தெரியாமல் தாக்குவதென்பார்களே, அத்தகைய தாக்கு தலினர். இவர்களின் தலைவனாக உயையினா இப்னுஹசன் அமைகின்றான். இவனைச் 'சினமுறுமனத்து உயையின' என்பர் உமறுப்புலவர், அகழ்ப் போர் நடந்தவிதம் கூறும் படலத் திற்கு இவன் பெயரால், உயை வந்த படலம் என உமறுப் புலவர் பெயரிட்டுள்ளார். கனல்முகம் தெரியும் கவட்டிலைச் சூலம் கைவிசைத் தெறிகதிர் வேலும் குனிதருவாளும் மருங்கினில் விசித்து கத்துபான் குழுவினர் சூழப் புனைமயிர்ப்புரவி ஆயிரம் நடப்ப அசன்பெறும் புதல்வன் கோளரியின் சிளமுறும் மனத்தன் உயையின என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப.