170 மக்கமா நகரினரின் அழைப்பின் பேரில் அவர்கட்கு உதவப் படை நடத்தி இணைந்துவந்த கோத்திரம், குழு. கூட்டம் ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைமையைக் கூறிவருகின்ற உமறுப்புலவர் கத்பான் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகின்ற வன் உயையினா என்று இயம்புவதோடின்றி, படலத்தின் பெயரையே உயைவந்தபடலம் எனக் கூறுவதற்குக் காரணம் உண்டு. கத்பான் கூட்டம் என்பது காசு தருவோருக்கெல் லாம் படை நடத்தும் கூலிப் பட்டானத்தையும் மக்கமா நகரி னர் கூலி கொடுத்து அழைத்து வந்துள்ள அவமானத்தை அம் பலப்படுத்துவான் வேண்டியே உயை வந்த படலம் எனப் பெயர் தந்துள்ளார் எனலாம். இல்லை எனில் முழுப்படைகட்கும் பொறுப்பினனாகத் தலைமை ஏற்று நடத்தி வருகின்ற அபூசுபி யான் வந்த படலம் என்றோ, குதிரைப் படை நடத்துவதில் நிகரில்லாத் தளபதியான காலிது பின்வலிது படைப்பலம் என்றே, வீரன் மகன் வீரனான இக்கிரிமா வந்த படலம் என்றே பெயரிட்டிருக்கலாம். மக்கா நகர வாசிகள், தங்களை விட மேலானவர்கள் இல்லை எனக் கூறிக் கொள்பவர்கள். அதிலும் குறைஷிக் குலத்தினர் தங்களின் வீரத்தாலும் விவே கத்தாலும் எதிலும் எதற்கும் தலைமை தாங்கும் ஆற்றல் தங் கட்கே உண்டு எனக் கொக்கரிப்பவர்கள். அத்தகையோர் கூலிப் பட்டாளங்களையும் குணங்கெட்ட சந்தர்ப்பச் சதிகாரர் களையும் இணைத்துப் பெருங் கூட்டமாகப் போருக்கெழுந்துள்ள விதத்தை அவமதிப்புச் செய்யவே கூலிப்படைத் தலைவனின் பெயரால் உயை வந்த படலம் என அகழிப் போர்ப் படலத் திற்குத் தலைப்பீந்துள்ளார் புலவர் உமறு. மக்கமா நகரி லிருந்து புறப்பட்ட பதினாயிரவரைக் கொண்ட படையணி' மதீனமா நகரினை நோக்கி, போரினையும் வெற்றியையும் மனத் தில் கொண்டு, மமதை மதமதப்பில் வேக நடை, வீர நடை விரைவு என, தம்மை மறந்த களிப்பில் வந்து கொண்டிருக்கும் திறம் கூறுகின்றார் உமறுப்புலவர். , பூண்டவெந் தானை அறிந்திலர் கழுத்தில் போட்டான் மணிவடம் உணரார்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/170
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை