பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 நீண்டநட்பினரைக் கண்டும்அங் கறியார் நிகழ்த்திய மாற்றமும் அறியார் ஈண்டியவேந்தர் யாவர்என் றறியார் எழுகடல் சேனையும் அறியார் தூண்டிய சீற்றத் தீயொன்றே தாங்கி ஏகினர் மிடலுடைச் சூரர். இப்படி, போர் நினைவொன்றே நினைவாகக் கொண்டு மதீன மாநகர் நோக்கிப் போகின்றது மக்கமாநகர்ப் படை