பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தத்தில் காயமுற்ற சஃது என்பார் இப்படை எடுப்பின் முடிவு காணும்வரை தான் இறவாதிருக்க அருள்புரியுமாறு ஆண்டவ னிடம் வேண்டிப் பாடுவதாக உமறுப் புலவர் ஆர்த்தளித் துள்ள பாடல்கள் ஆண்டவனைப் பாடுகின்ற, அறிவுத் திறம் படைத்த துதிப்பாடல்களாய்த் திகழக்கான்கின்றோம். வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும் மறைதெளிந்த மற்றை யோர்க்கும் ஊனுடைய பல்லுயிர்க்கும் உணர்வரிய பேரொளியாய் ஓங்கி நின்ற ஞாளம்எனும் பரம்பொருளே அழியாத பெரும்பேறே நடுநின் றென்றும் ஊனமற விளையாடி எவ்விடத்தும் எங்காளும் உறையும் கோவே! குறைஷியெனும் குவக்காபிர் பகைகாளும் வனருமெனில் கோதில் லாது நிறையும் என துடல்உயிரைத் தரவேண்டும் எத்தலத்தும் நீண்ட ஜோதி இறையவனே அக்காபிர் நாள்தோறும் தேய்வார்எனில் இலங்கும் வானி உறையும்மலர்க் கரத்துடனே பிசயில் மவுத்தாக்க உதவி செய்வாய்! சஃது பாடியதாக உமறு தரும் ஐந்து பாடல்களில் முதலும் முடிவுமாய் இலங்குகின்ற பாடல்களே இவ்விரு பாடல்களும், இடையில் உள்ள மூன்று பாடல்களும் இதனினும் இனிய கருத்துக் கருவூலங்கள் எனலாம். இது போன்றே போர் நிமித்தம் தொழுகை தவறி விட்டதற்காகவும், போரின் வெற் றிக்காகவும் நாயகப் பேரொளி அவர்கள் இறைவனைத் துதித்து வேண்டிய அரிய உயரிய கருத்துக்களையும் உமறு, செந்தமிழ்ப் பாடல்களாகத் தந்து மகிழ்விக்கின்றார்.