181 மதீனமாநகர் நோக்கிப் புறப்படுகின்றார்கள். போகும் வழி யில் பாலை நிலம் குறுக்கிடுகின்றது. பாலையின் வெம்மையை முன்னம் பல பாடல்களில் விளக்கியுள்ள உமறுப் புலவர் இவ் விடத்தும் கூறுகின்றார். . பாம்புகள், ஆகாரம் கிட்டாக்காலை, காற்றினையே ஆகார மாகக் கொண்டு வாழுந்தன்மை உடையன. பாலையின் வெப்பத்தால் காற்றும் அற்றுவிட்டது. எனவே பாலைவனப் பாம்புகட்குக் காற்றும் கிட்டவில்லை. மான்களுக்கோ நாவரட்சி;நாய்களின் நீண்ட நாக்குகளிலே வடிகின்ற நீரை உண்ணக் கருதி மான்கள் ஓடுகின்றன. அவை ஓடுகின்ற வேகத்திலே எழுகின்ற காற்றை உண்ணும் நோக்கில் பாம்பு கள் தங்களின் வாய்களைத் திறந்து கொண்டிருக்கின்றன. அப் பாம்புகளின் அகன்ற வாய்களைப் பொந்துகள் என எண்ணிப் பாலையின் வெப்பம் தாங்காமல் ஓடிவருகின்ற எலிகள் அப் பாம்புகளின் வாய்களில் தாமாகவே தாவி நுழைகின்றன, எது? என்ன? என்று நிதானித்துப் பார்க்கவும் இயலாத கொடிய வெப்பம் தன்னரசு செலுத்திற்று அப்பாலையில், என் பதை விளக்க, மான்களின் ஓட்டத்தையும், எலிகளின் நிதான மிழந்த நிலையையும் காட்சிப்படுத்திக் காட்டுகின்ர் உமறுப் புலவர். 1 தேற்றமுற நாயின்நெடு நாத்திகழும் நீரை மாற்றமற உண்ணவரும் மான்உடல் பிறந்த காற்றினை அருந்தும்விடக் கட்செவியன் வாயைத் தோற்றுபுழை என்றுஎலி சுழன்றுசெல எண்ணும். திகைப்பும், நகைச்சுவையும், உண்மையும் கலந்து உமறு புல்லர் தமது கற்பனையில் காட்டுகின்ற பாலைநில வருண னையை, பாலைவன வெப்பத்தால் தகிக்கப்படுவோரும் கூடப் படிப்பாராயின் தமது துன்பம் மறந்து மகிழத்தக்க நகைச் சுவைக் கற்பனை வளமுடையதாய் இப்பாடல் திகழக் காண் கின்றோம். அத்துடன் பாலைநிலத்தின் தகிப்பையும் கண்டு திகைக்கின்றேம்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/181
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை