பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 சூறைக்காற்று, உயிரைச் சூறையிட வல்லது என விள்ளக்காண்கின்றோம். உண்மையில் பாலையில் எழுகின்ற சூறைக்காற்று மணலை வாரி வீசி, மனிதனைக் கீழே தள்ளி, மணல் மேடிடுமாறு மூடிக் கொன்றுவிடுகின்ற தன்மையுடைய தென்பதை இக்காலத்தில் உள்ள நாம் அறிவோம். உமறு பாடிய காலம் நிலவள அறிவை முழு அளவில் பெறுவதற் கான வாய்ப்பில்லாக் காலம். அக்காலத்தே போழ்த்த உமறுப் புலவர், பாலை நிலத்தின் தன்மையைப் பாடியுள்ளது வியத்தற் சூரியதாம்.மீண்டும் நினைவு கூர்ந்து கொள்வோம். நாய்களின் வாய் நீரை நாடி மான்கள் ஓடுவதும், அம்மான்களின் ஓட்ட விசையிலே எழுகின்ற காற்றை உண்டு வாழப் பாம்புகள் வாய் களை அகலத்திறந்து உறைவதும், அப்பாம்புகளின் வாய்களைத் தாம் வாழ்வதற்கான பொந்துகள் என எண்ணி எலிகள் புகு வதும் பாலைவன வெம்மைபற்றிய கற்பனை; உமறுவின் அதீதக் கற்பனையை இதில் காணுகின்றோம். ஆனால் பாலைவனச் சூறைக்காற்று மனிதனை மணலால் மூடிக் கொன்றுவிடும் என்பது கற்பனையன்று: உண்மை. கற்பனையைக் கண்டு ரசிப் போம். உண்மையைக் கண்டு வியப்போம். கற்பனைக்கிடையே உண்மை மிகைத்து விளங்கும் போது இதுதான் கவிதை என்று கூறி வாழ்த்தி வரவேற்போம். ஆம்,தமிழர்கள் அனை வரும் போற்றிப் புகழுமாறு இன்தமிழ்ப்பா இசைத்து மகிழ வைப்பவர் உமறுப் புலவர். அவர் பாடிய சீருப்புராணத்தில் உம்றாவுக்குப் போன படலத்தில் நாம் நுழைந்துள்ளோம். மக்கமா நகரின்கண் உம்றாச் செலுத்தச் சென்று இந்த ஆண்டு திரும்பி அடுத்த ஆண்டு வருவதென்ற உடன் படிக்கையை ஏற்று மதீனமாநகரம் போந்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது சரியல்ல என்றே ஆரம்பத்தில் நபித்தோழர்கள் எண்ணினார் கள். ஆனால், இவ்வொப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட சுமுக உறவு, பகைக்குறைவு, அக்கம்பக்கத்தில் உள்ளோர்கள் கொண்ட மகிழ்வு, அதனால் இஸ்லாத்தின் பால்கொண்டிருந்த தப்பெண்ண மறைவு, இதனால் இஸ்லாம் பரவ வாய்த்த வாய்ப்பின் விரைவு ஆகியவற்றைக் கண்டபோது நாயகத் திரு