பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மேனி அவர்களின் தோழர்கள் அடைந்த ஆனந்தத்திற்கோர் எல்லையே இல்லை. சுற்றிப் பகையிருள் மூடியிருந்தது நீங்கி, அரபுநாடு முழுவதும் பெரும் அளவில் இப்போது சன்மார்க்க ஒளி பரவி எழலாயிற்று. மக்கமாநகரில் மனைவிமக்கள், மதீனத் திலே தனித்த வாழ்க்கை என்கின்ற நிலை தகர்ந்து போயிற்று. அபிசீனியா நாடு சென்று வாழ்ந்தோர்கள் எல்லாம் கூட முழு அளவில் மதீனமாநகரில் வந்து வாழத்தலைப்பட்டு விட்டார் கள். தீமை நீங்கி, நன்மை மலரத் துவங்கி விட்டது அரபி நாட்டில் ! நபிகள் நாயகம் அவர்கள் உம்றாவுக்குப் போனது அவர்கள் தம் ஐம்பத்தொன்பதாம் ஆண்டில், நூற்றுப்பதின் மூன்று பாடல்கள் இப்படலத்தில் உள்ளன. .