31 உ உமறுப் புலவர் யாத்துள்ள சீறாப் புராணத்தில் மொத்தம் மூன்று காண்டங்களும், தொண்ணூற்றிரண்டு படலங்களும் ஐயாயிரத்து இருநூற்று இருபத்தேழு பாடல் களும் உண்டு என்பதை அறிந்துள்ளோம், இதன் இறுதிக் காண்டம் ஹிஜரத்காண்டம், இறுதிப்படலம் உறணிக் கூட்டத் தார் படலம். உறணிக்கூட்டத்தார் படலத்தில் உள்ள பாடல் களின் எண்ணிக்கை பதினேழு. இப்படலத்தில் அறியக் காண் கின்ற வரலாறு, இஸ்லாத்தில் இணைந்திராத உறண் எனும். அயலவர் சிலர் நோய் உற்ற நிலையில் நபிகள் நாயகம் அவர் கள் முன்னர்த்தோன்றி, சன்மார்க்கத்தைத் தழுவ வந்துள்ள தாக உரைக்கின்றனர். அவர்களை ஏற்றுக்கொண்ட பெருமா னார் அவர்கள், அவர்கட்குக்கண்டுள்ள நோய்க்கு ஒட்டகத்தின் பால் அருந்தினால் நலமாகிவிடும் என்று சொல்கின்ருர்கள். ஆனால் அவர்கள் தங்களிடம் ஒட்டகங்கள் இல்லை என்றும் பால்வாங்கி அருந்தவும் வகையில்லை என்றும்உரைக்கின்றனர். காட்டுப்புறத்தேயுள்ள ஒரு ஒட்டகப் பண்ணைக்கு அவர்கள் அனைவரையும் அனுப்பி, பால்கொடுத்துதவவும், உணவு நல்கி ஆதரிக்கவும் நபிகள் நாயகம் ஏற்பாடுசெய்கின்றார்கள். அங்குச் சென்ற அக்கூட்டத்தினர் ஒட்டகப் பண்ணையின் காவலர்களைக் கொன்று, அவ்வொட்டகங்களைக் கவர்ந்து சென்றுவீடு. கின்றனர். பால் வார்த்தோர்க்குப் பாதகம் செய்த கூட்டம் உறணிக் கூட்டம். அவர்களின் அடாத செய்கைபற்றிப் பேசு வதே சீருப்புராணத்தின் இறுதியிலுள்ள உறணிக்கூட்டத்தார் படலம். இப்படலத்துடன் நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு முற்றுப்பெறவில்லை. அறுபத்து மூன்றாண்டுவாழ்க்கை
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/187
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை