பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நபிகள் நாயகம் அவர்கள்தம் உவக வாழ்க்கை. உமறுப் புலவர்தம் சீறாப்புராணம் சீறாப்புராணம் நாயகத்திருமேனி அவர்களின் ஐம்பத்தொன்பதாம் வயது வரையுள்ள வரலாற்றினைத்தான் செப்புகின்றது. இதன் பின்னர் உள்ள நான்காண்டுக்கால வரலாறு காணப்படவில்லை. புலவர் உமறு எழுதவில்லையா? அல்லது அவர் எழுதிய முழுச்சுவடியும் கிட்டவில்லையா என்பது தெரியவில்லை. அக்காலப் புலவர்கள் நூல் முற்றுப்பெற்ற காலம், அரங்கேறிய காலம், ஆகிய விவரங்களைச் சுவடியின் ஆரம்பத்திலோ முடிவிலோ பாடலாக்கிவைப்பது மரபு. சீறாப் புராணத்தில் அம்மரபு காணப்படவில்லை, சீறாப்புராணம் . தோன்றிய ஐம்பதாண்டுகட்குள் இதன் பிற்பகுதியாகச் 'சின்னச் சீறா என்றொரு நூல் தோன்றியிருக்கக் காண்கின் றோம்.ஆயிரத்து எண்ணூற்று இருபத்துமூன்று பாடல்கள் அதில் உள்ளன. உமறுப்புலவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி, நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை முற்றும் வரை அந்நூலில் திகழக் காண்கின்றோம். அந்நூலின் ஆசிரியர் பெயர் பனி அகமதுமரக்காயர் என்றுளது. ஆசிரியர் பெயர் பொறிக்கப் பட்டிராவிடினும் நடையே மெய்ப்பித்து விடும், சின்னச் சீரு உமறுபாடியதல்லவென்று. தமிழ்க் கவிதை நடையை மென்நடை, வன் நடை எனப் பகுத்துரைப்பதுண்டு. கம்பராமாயணம் மென்நடை, சீவகச் சிந்தாமணி வன்நடை நூல், அதேபோன்று, சீறாப்புராண நடை வன் நடை. சின்னச்சீறா நடை. மென்தடையாகும். மென்நடையைப் பெண்நடை என்றும்,வன்நடையை ஆண்நடை என்றும் சொல்வதுண்டு. ஆக, சீறாப்புராணமும், சின்னச்சீறாவும் நடையால் வேறுபடு வதைக்கொண்டு இரு வேறு ஆசிரியர்கள் எழுதியவை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டு காவியங்களும் ஒருசேர இணைந்ததே நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு. முதல்முறை மக்கமாநகரினுள் சென்று நிறைவேற்ற முடியாத உம்றாவெலும் காணிக்கையை ஒன்றரை ஆண்டு கட்குப் பின்னர்த் தமது தோழர்களுடன் சென்று நிறை