பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 வேற்றித் திரும்புகின்றார்கள் நபியவர்கள். பின்னர் அவர்கள் தம் அறுபத்தொன்றாம் வயதில் திரும்பவும் மக்கமா நகருக்குச் செல்கின்றார்கள், அதுபோது நபிகள் நாயகம் அவர்களின் கொள்கையை ஏற்கின்றார்கள் மக்கமா நகரத்தின் மாந்தர்கள். ஆம், 'கத்தியின்றி, ரத்தமின்றி' எனப் பாடுவாரே நாமக்கல் கவிஞர்! அந்த முறையில், நபிகள் தாயகம் அவர்களை, அவர்கள் தம் கொள்கைக் கோட்பாட்டினை ஏற்றவர் நகரமாகின்றது. மக்கமாநகரம். அகழ்ப்போர் நடந்த காலை, முப்பெருந் தளபதிகளாக மக்கமா நகரிலிருந்து படை நடத்தி வந்த அபூசுபியான், காலித்பிள்வலித், இக்ரிமா போன்றரெல்லாம் சன்மார்க்க நெறி தழுவித் திகழ்கின்றார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெருங் கூட்டத்தின ருடன் தமது இறுதி ஹற்ஜை, அதாவது மக்கமா நகரப் புனிதப் பயணத்தை நிறைவேற்றுகின்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். இதன் பின்னர், மூன்று மாத காலயே வாழ்ந் திருந்து, மதீன மாநகரினை என்றென்றும் தமது உடலுறை யும் உயர்நகரமாக ஆக்கி, உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுகின்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். இவ்வரலாற்றினை அறிய, சின்னச்சீருக் காவியத்தையும் நாம்நுகர வேண்டும். இப்பொழுது நாம் உமறுப் புலவர் பாடிய சீறாப்புராண அள வோடு நிறைவு காண்கின்றோம். இவற்றிலும்கூட, கவி நயத்தை மட்டுமே காட்டிச் செல்லாமல், நபிகள் நாயகம் அவர் களைச் சூழ்ந்த இன்னல் களையும், இன்னல்கள் விளைத்தவர்களை யும், அவற்றை யொட்டிய பாடல்களையுமே கண்டு வந்துள் ளோம். இவ்வாறு கூறியமைக்குக் காரணம், சீருப்புராணத் தின்கண் உள்ள ஐயாயிரத்து, இரு நூற்று இருபத்தேழு பாடல் களுமே இலக்கியச் சுவையும் வரலாற்றுண்மையும் உடை யனவாயிருப்பதால், அனைத்தையும் உரைக்க, காலம் இடந் தராதாகையால், ஒரு கோணத்தில் நின்று விளக்குவது நலம் என்ற நோக்கில் இவ்வாறு பகுத்துரைக்கப்பட்டதாம் என்க. கரும்பின் எப்பகுதியுமே இனிப் புடைய தென்பது