பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.0 திமிர்பகை வரைவென்ற பரிதிகளும் எமதெட்ட தீரனணி வாயில்வித்துவான் உமறுகுழு றிடில்அண்ட முகடும்ப டீரென்னும் உள்ளச்சம் வையும் பிள்ளாய்! திடீரென எழுந்து ஆர்த்து முழக்கிய பாடலைக் கேட்ட வாலை வாரிதி திடுக்கிட்டான். பாட்டில் உள்ள சொல்,பொருள், ஓசை நயம், எடுத்தியம்பிய விதம் அவனைத் திகைக்க வைத் தன. இவரைப் பிள்ளையென எண்ணிய தன் பேதமையை நினைந்து வருந்தினான். வயதினை வைத்து அறிவினை மதிப் பிட்டது தவறென உணர்ந்தான். இருக்கையை விட்டெழுந் தான். உமறுவின் அருகிற் சென்றான். இளமையிலேயே உமறுக்குள்ள புலமையைப் போற்றிப் புகழ்ந்தான். தான் அணிந்திருந்த விருதுகளை உமறுக்கு அணிவித்தான். தோல் வியை ஏற்று அவையை விட்டு வெளியேறினான். அதுகாலை உமறுக்கு வயது பதினாறென்பர். பதினாறே வயதுடைய உமறுவைக் கடிகைமுத்துப் புலவரின் விருப்பின்படி எட்டப்ப பூபதி தமது அரசவைக் கவியாக்கி மகிழ்ந்தார். இந்த உமறுப் புலவர்தான் பிற்காலத்தில் சீறாப் புராணம் பாடியவர். இவருடைய ஊர் கீழக்கரை என்பர். செத்தும் கொடை கொடுத்த வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் படி உமறுப் புலவர் சீறாப் புராணம் பாடினார் எனக் கூறப்படு கின்றது. மிகப்பெரும் ஞானவள்ளல்களான கீழக்கரை சதக் கத்துல்லா அப்பா என்கின்ற முகம்மதுதீரி போன்ஞரின் ஆசியும் ஆலோசனையும் பெற்று அருள் வாக்காகப் பாடப் பெற்ற காவியம் சீறாப் புராணம். நபிகள் நாயகம் அவர்களைக் கனவில் கண்டு, அவர்கள் தம் ஆசியும் அனுமதியும் பெற்ற பின்பே உமறு சீறப்புராணம் பாடினார் என்பர். இக்கூற்றிற்குச் சான்றாக உள்ளது உமறு பாடியுள்ள முதுமொழி மாலை.