பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நுபுவத்துக் காண்டம், நபிப்பட்டம் அருளப்பட்டதில் இருந்து, மக்கமாநகரில் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்த காலம் வரை நடந்த வரலாற்றினைக் கூறுவது. ஹிஜ்ரத் காண்டம் என்பது, மக்கமாதகரிலிருந்து மதீன மாநகருக்கு நபிகள் நாயகம் அவர்கள் புறப்பட்டுச் சென்றது முதல் அவர்களின் மதீனாநகர் வாழ்க்கையைக் கூறுவது. பெருங்காப்பியம் என்பது வீடு பேறு வரை கூறுவது என்பது இலக்கண வழக்கு. ஆனால் உமறு தரும் சீறா, உறணிக் கூட்டத்தார் படலத்துடன் முடிகின்றது. நபிகள் அவர்களின் இறப்புவரை இந்நூல் உரைக்கவில்லை. எனினும் சீறாப்புராணம் புலவர்கள் மத்தியிலே, பெருங்காப்பியம் என் கின்ற மதிப்புடன் திகழக் காண்கின்றோம். சீறாப்புராணத்தின் சிறப்பிற்கு இது ஒரு சான்றாகும். சீறாப் புராணத்தில் மொத்தம் தொண்ணூற்றிரண்டு படலங்கள் உள்ளன. ஐயாயிரத்து இருநூற்று இருபத்தேழு விழுமிய செந்தமிழ்ப் பாக்கள் திகழ்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இதன் முதற்பதிப்பு அச்சாகி யுள்ளது. எடுதேடிப் பதிப்பித்து வெளியிட்டவர் ‘புலவர் நாயகம்' என்கின்ற விருதுப் பெயர் உடைய செய்கப்தில் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் ஆவார். இவர் மேற்கொண்ட சுவடிதேடும் முயற்சி வெற்றி பெற்றிராவிடின், இவ்வரிய தேன்தமிழ்க் காப்பியம் நமக்குக் கிட்டாது போயிருக்கலாம். எனவே, நாடுசுற்றி,ஏடு தேடி, சீறாப்புராணம் என்னும் இவ்வரிய காப்பியத்தை அச்சிட்டு வழங்கிய புலவர் நாயகம் அவர்கட்கு நன்றி கூறி நூலாய்ந்து துய்ப்போமாக!