பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நூல் செய்வதின் நோக்கம், தம்மனத்தகத்தே மட்டுமின்றி தூலினைக் கற்கும் யாவருடைய மனத்திலும் இறைவனைப் பொருத்துதல் தமது நோக்கமென உமறுப்புலவர் கூறுகின் றார் என்பது விளங்கும். இப்படி ஒரு பாடலைப் பல கோணங் களில் கண்டு, காணுந்தோறும் அதன் வடிவில் ஒரு புதுமை தோன்றுவதை உணர்ந்து இன்பம் துய்க்குமாறு அமைவதே சிறப்புடைய கவிதை யாகும். அத்தகு முறையில் பாடல் புனையும் கவிஞனையே காலத்தை வென்ற கவிஞன் எனப் புலவர் உலகம் போற்றும். உமறுப் புலவர் தமது முதல் பாட்டிலேயே இந்த அரிய வெற்றியை ஈட்டுத் திகழக் காண் கிறோம். இவ்வுயரிய பாடலை ஒருமுறை பாடிப் பார்த்துக் கொண்டால் உமருவின் உயர்வை மட்டுமின்றி, உயர்வையும் ஓர்ந்து துய்த்து மகிழ முடியும். திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த் தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த மருவினும் மருவாய் அணுவினுக் கணுவாய் மதித்திடாப் பேரொளி அனைத்தும் பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப் பூதலத் துறைந்தபல் உயிரின் கருவினும் கருவாய்ப் பெருந்தலம் புரந்த கருத்தனைப் பொருத்துதல் கருத்தே! பாடலின் இப்பாடலை முழுமையாகப் படிக்கிறபோது, உருவமற்ற பொருள்களாகப் பொறுக்கி எடுத்து, அதனுள் அதுவாய் இறைவன் இயங்குவதை உமறு கூறக் காண்கிறோம். இத்தகு கடவுளை எவ்வாறு மனத்தில் பொருத்திக் காண்பது? என்னும் கேள்விக்கு விடைகாண இப்பாடலை விளக்கணியாக்குதல் வேண்டும். விளக்கணி என்பது பாட்டில் உள்ள ஒரு சொல்லைத் தொட்டுக் கொண்டு, பாடலின் பொருள் துலங்க விளக்கிக்