பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 படம் உமறுப் புலவர் பாடியுள்ள நாட்டுப்படலப் பாடல்களில் காணப்படுகின்ற உயரிய வருணனை தமிழ் நாட்டைப் பிடித்துக் காட்டுவதற்கொப்பத் திகழ்கின்றது. எனவே அப் பாடல்களைக் கண்ணுறுவோம்: உமறுப்புலவர் அரபு நாட்டைத் தமிழ் நாடாகவே நினைத்து பாடியுள்ளார் எனக் கூறக் காண் கின்றோம். மேலெழுந்த வாரியாக நோக்கின், இக்கூற்றில் உண்மை இருப்பது போன்றே தோன்றும். ஆனால் கூர்ந்து நோக்கின், தாம் பாடுகின்ற நாடு இதுதான் எனக் குறிப்பிட்டு உமறுப் புலவர் பாடியிருக்கவில்லை என்பது புலப்படும். அவர் யாடியுள்ள நகரப் படலத்தில் மக்கமா நகர்வளம் சிறிதெடுத் திசைப்பாம் என்று மக்க மாநகரினைப் பாடப்போவதாகக் கூறிப் பாடியிருக்கக் காண்கின்றோம். இதுபோன்று அரபு நாட்டையோ, வேறு எந்த ஒரு நாட்டினையோ குறித்துப் பாடாமல்,பொதுப்படையாகவே நாட்டுப்படலம் பாடியுள்ளார். அவர்தம் பாடல்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய் தல் நிலங்கள், அவற்றின் வளங்கள், அவற்றினிடையே பெருக்கெடுத்தோடுகின்ற வெள்ளம், விவசாயப் பணி, அதில் ஈடுபட்டுழைக்கின்ற மக்கள், அவர்களின் உழைப்பால் ஈட்டிய தானிய மணிகள், அவற்றைச் சுமந்து செல்கின்ற வண்டி எல்லாமே விரித்துரைக்கப்பட்டிருக்கக் காண் கிறோம். ஆனால் அந்த நாடு எது எனச் சுட்டாமல் தெளிவாகத் தெரிகின்றது. நாடு இன்னதெனச் சுட்டாமல் என் உமறு பாடி யுள்ளாரென்றால், நாட்டுப் படலம் பாடுவது அவர் காலத் தமிழ்க் காவிய மரபு என்பதால் பாடியுள்ளார் எனலாம். அரபு நாட்டைப் பாடி இருக்கலாமே என்று கேட்பதாயின், மங்களமாகப் பரட வேண்டும் என்பது மரபு. அரபு நாடு பாலை வன நாடு ஆனதால் அந்நாட்டைப் பாடுவது மங்களமாகா தென்பதால் பாடவில்லை எனக் கொள்க. இதே போன்றே அரபு நாட்டில் ஆற்றுவள ரின்மையால் ஆற்றுப் படலம் பாட வில்லை என்றும் அந்நாட்டில் அக்காலை அரசு என்று ஒன்றின் மையால் அரசியல் படலம் பாடவில்லை என்றும் கொள்ளலாம். ஆனால் மரபை யொட்டி நாட்டுப் படலம் பாடிப் போந்துள் வாகனங்கள்