மகிழத் தக்கதாகும். 32 இஸ்லாமியர்களோ இஸ்லாமியர்களோ ஒன்றளித்தால் பத்து நல்குவேனென இறைவன் உரைத்திருப்பதை இப் பாடலில் கண்டு மகிழ்வார்கள். துன்பம் நேருங்கால் மனித இனம் மட்டுமின்றி, உயிரினம் அனைத்துமே பகை மறந்து ஒன்றிணைந் தொழுகும் நியதி உலகில் நிலவுவது கண்கூடு. இந்த உயரிய நியதியை, மழையும் குளிரும் தோன்றி வாட்டுகின்ற போது, காட்டிலும் காடடர்ந்த மலையினூடும் வாழ்கின்ற யானையும் சிங்கமும் போன்ற ஒன்றுக்கொன்று பகை கொண்டு வாழும் இயல் முடைய மிருகங்களெல்லாம் கூடத் தம் பகை மறந்து ஒன்று பட்டு நேசமாய் நெருங்கி உறைந்தன என்று உமறுப் புலவர் பாடியிருப்பதைப் படிக்குங்கால் இடுக்கணிலும் இறைவன் விளைவிக்கின்ற நன்மையை நினைந்து மகிழவைக்கின்றது. இறைவன் படைத்துள்ள இன்ப துன்பங்கள் அனைத்துமே நன்மை பயப்பதற்கே என ஓர்ந்து தெளிய முடிகின்றது. பம்மி எங்கணும் பொழில்தரு சாரல்வாய்ப் பட்டுக் கம்மி னத்து அக டுறக்கொடு கியகுளிர் கலக்க மும்ம தக்கரி களும்அரி களும்முரண் அறவே சம்ம தித்தொரு புடைகிடப் பளஎனச் சாரும். இதுபோன்ற அழகிய இனிய நெறியுடைய ஐம்பத்து ஆறு நயமிளிர் பாக்களை உமறு பாடிய நாட்டுப் படலத்தில் காண்கின்றோம்: கண்டு ஈற்று மகிழ்கின்றோம். நாட்டுப் படலத்தைப் போவின்றி, நகரப் படலத்தைப் பாடுங்கால் கற்பனையைத் தவிர்த்து, மக்கமா நகர் வளம் சிறி தெடுத்து இசைப்பாம் எனக்கூறிப் பாடத் தொடங்குகின்னர் உமறுப் புலவர். இது கூர்ந்து நோக்கத்தக்கதாம். அக்கால மக்கமா நகரம் வளம் நிறைந்த நகரம் என்று அறிந்தோர் உரையார். அந்நகரில் உள்ள வளமெல்லாம் வணிக வளம்தான்; எனவே அத்தகரின் வணிக வளத்தைச் சில பாடல்களில் கூறுகிறர், உமறு.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை