37 பற்றிய விரிவுமட்டுமே பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணப் படா தொன்றும், ஆதி மனிதனை ஆதம் என்ற பெயரில் இறைவன் படைத் தான். அவரை ஆதியில் சொர்க்கபுரியில் வைத்தான். அங்கே அந்த ஆதி மனிதர் இறைவனின் திருநாமம் பேரொளியாக இலங்குவதைக் கண்டார். அப்பெயரின் கீழ் இன்னொரு பெயர் இலங்கிற்று. அது எவருடைய பெயர் என்று, ஆதிமனிதராகிய ஆதம் இறைவனிடத்தே கேட்டார். கணித்தள வறுக்க வொண்ணாக் கடவுளே குதாயே நீங்கா மணிக்கதி நெறிக்கும் சொர்க்க வாயிலின் நிலைக்கு பணித்தநிள் திருநாமத்தின் உடன்ஒரு பெயரைப் அணித்துவைத் திருக்கக் கண்டேன் அவர் எவர் மேல் பால் புண்பாய் அறியேன் என்றார். இது, ஆதி மனிதராகிய ஆதம் ஆண்டவன் பால் கேட்ட கேள்வி. இன்னதன்மை, இன்னவடிவம், இப்படித்தான் இருக் கின்றாய் நீ என்று அறுதியிட்டு எவராலும் உரைக்க ஒண்ணாக் கடவுளே! சொர்க்கவாயிலின் மேல்பால் உன்னுடைய பெய ருடன், வேறு ஒரு பெயரும் காணப்படுகின்றதே! அது யாரு டையது? என ஆதம் கேட்டார் என்பதே இதன் சுருக்கமான பொருள். மாதர்சூல் அகட்டுள் தோன்றா மனுநெறி ஆதமேநின் காதலில் உதவு கின்ற கான்முளை அதிலோர் பிள்ளை வேதநா யகமாய் எங்கும் விளங்குதின் விளக்காய்ப் பிள்ளுள் பூதல நபியாய்க் காணப் படைத்தனன் புகலக் கேண்மோ முதல் மானுடராகிய ஆதம் அவர்களின் கேள்விக்கு ஆண்டவன் தந்த பதிலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை