பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 காரணப் பொருள் என்று, பரம் பொருளாகிய இறைவன் ஆதத்திற்கு உரைக்கின்றான். உரைத்து, காரணம் இன்றிக் காரியம் ஆகா.எனவே கலைமறை முகம்மது என்னும் காரணம் இல்லையாகில் உலகு, வானம், சூரியன், சந்திரன், நட்சத் திரங்கள், சுவர்க்கம்,மலை, கடல், நதி, பாதாளம், அமரர்கள் ஆகியவற்றுள் எது ஒன்றையுமே படைக்கின்ற, படைக்க வேண்டிய காரியம் இல்லை. ஆதமே உம்மையும்கூடப் படைக் கின்ற வேலை தேவை யற்றதாம். இதனை உணர்வீராக! என ஆண்டவன் முதல் மனிதரான ஆதத்திற்கு விளக்கம் உரைத்த ஆகமத்தை இப்பாட்டு நிலைப்படுத்துகின்றது. இப்பாடலில் பொதிந்துள்ள பொருள் மிக ஆழமானது, விரி வான விளக்கம் கூறத்தக்கது; படைப்பிற்கான அடிப்படை ஆதாரம் எது என்பதை நெஞ்சில் நிரப்புவது. ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தத்துவங் களைக் கவிதையில் கொணர்வது கடினம். அப்படிக் கொணரும் போது, புற அழகினைக் கூறுகின்ற சொற்களைப் பயன்படுத்த இயலாது, கூடாது. அந்தத் தத்துவங்களைக் கூறுகின்ற சொற் களின் உட்பொதிந்துள்ள கருத்துக்கள் தாம் அச்சொற்கட்கு மட்டுமின்றி, தம் மனத்திற்கும் ஆனந்த அழகைத் தருவன. எனவே, பாடலைப் படிக்கின்ற நாம் எவ்வளவு பெரிய அரிய உயரிய தத்துவத்தை இப்பாடலினுள் கவிஞன் கொண்டு வந்து விட்டான் என்று கண்டுவப்பதே சிறப்பு. இந்த நிலையை அடையக் கவிஞன் கூறுகின்ற தத்துவம் நமக்குத் தெரிந்திருத் தல் வேண்டும்.சீறாவில் உமறு தருகின்ற பாடல்களில் பொதிந் துள்ள கருத்துக்களைத் தெரிந்திருந்தால் அன்றி, பாடலின் உயர்வு நோக்கி நாம் உவகை எய்த இயலாது, இந்தப் பாடலுக்குப் பின்னர், சீருவின் தலைமுறைப் படலத்தில் உள்ள பாடல்கள், உலகில் மனிதன் தோன்ற நிகழ்ந்த நிகழ்ச்சிகளை விவரிப்பனவாக உள்ளவை யே அதாவது,