43 இரு பாடல்களைக் கொண்டு உமறுப் புலவர் நமக்கு அறிமுகம் செய்கின்றார். அறத்தினுக்கு இல்லிடம் அருட்கோர் தாயகம் பொறுத்திடும் பொறுமையில் பூமிக்கு எண்மடங்கு உறைப்பெருங் குலத்திலுக் கொப்பிலா மாமணி சிறப்பினுக் குவமையில் லாத செல்வியே! என்றும், இற்புகுந் தெழுமதி இலங்கு மாமணி விற்புரு வக்கடை மின்கள் நாயகம் பொற்பெலாம் பொதிந்தபொற் கொடிநற் பூவையர் கற்பெலாம் திரண்டுருக் கொண்ட கண்னியே ஆமினாவின் குணத்தை, நலத்தை, எழிலை, ஏற்றத்தை, இனிய பண்பை, அன்பை, அடக்கத்தை, அறிவை நம் முன்பு இவ்விரு பாடல்களாலும் படம் பிடித்துக் காட்டி விடுகிறார் உமறுப் புலவர். இதிலே ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துவது என்பார்களே, அப்படி ஒரு சொல்லிற்கு இரு. பொருள் தருகின்ற சொற்களைக் கொண்டு திகழ்கின்றது. முதல் பாட்டின் முதல்வரி. ஆம்; அறத்திற்கு இல்லிடம் என் பதை, அறம் சிறக்கும் வாழ்வுடையவராக ஆமினா வாழ்ந்தார் கள் என்று கொள்ளவும், அறமே வடிவான நபிகள் நாயகம் அவர்களைத் தம் வயிற்றில் சுமந்த இல்லமாகவும் திகழ்ந்தார் கள் என்றும், அறத்திற்கு இல்லிடம் என்பதற்குப் பொருள் கொள்ள இயலும். இதே போன்றே அருட்கோர் தாயகம் என்றிருப்பதற்கும் பொருள் காணலாம். இரண்டாவது பாட்டில் உள்ள முதல் இருவரிகளும் ஆமினாவின் பால் உறைந்து திகழ்கின்ற பெண்மை நலத்தைப் பேசும். ஈற்றிரண்டடிகள், ஆமினா அவர்களின் உயர்வைப் பேணி, உரைப்பதுடன், அரபு நாட்டில் அன்று வாழ்ந்த பெண் மணிகள் கற்பிழந்து விட்ட அவலத்தைக் கூறுகின்ற சரித்திர விளக்கமாகவும் அமைந்து திகழக் காண்கின்றோம். ஆம், நற் பூவையர் கற்பெலாம் திரண்டுருக் கொண்ட கன்னி என்றிருப்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை