பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 'இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்' என்ற தலைப் பில் 1974-இல் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக அடியேன் பதிப்பித்து வெளியிட்ட 572 பக்க அளவிலான கருத்தரங்கக் கட்டுரைகள் நூனில் உள்ள 40 ஆய்வுக் கட்டுரை களில் ஒன்றாக (32-வது) இலங்குவது (இப்போது டாக்டர்) வீ. ஞானசிகாமணி அவர்களின் 'கவி.கா.மு.ஷெரிபின் கவிதைகள்' என்ற அருமையான ஆய்வுரை. அக்கட்டுரையின் முதல் வாக்கியமே இதுதான்: கவிஞர் கா.மு. ஷெரிப் அவர்கள் அடிமை இந்திய மண்ணில் வாழ்ந்தவரும் விடுதலை பெற்ற இந்திய மண்ணில் வாழ்கின்ற பேறு பெற்றவருமான ஓர் ஒப்பற்ற இசுலாமியக் கவிஞராவர். கவி கா.மு.ஷெரிப் சாதாரணக் கவிஞர் இல்லை; பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடவல்ல பாவலர். இவர்தம் நபியே! எங்கள் நாயகமே! (1972) என்ற நூலுக்கு எளியேன் படைத்த மதிப்புரையின் ஒரு பகுதியையும் மேற்குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையில் அதன் ஆசிரியர் (இப்போது டாக்டர்) வீ. ஞான சிகாமணி எடுத்துக் காட்டியுள்ளார். அது வருமாறு: << ஒரு குட்டித் திருக்குறள் போல் ஒரு குட்டித் திருவாசகம் போல் பயன்தரும் பண்பு படைத்த டிந்நபி வாழ்த்துப்பாமாலை ஒவ்வொரு இந்துவும்கூடப் பாராயண மாய் ஓதத் தக்க நூல்........" அரசியல் - அதுவும் திரு.வி.க. பாடியது போலக் கொள்ளை எரி அரசியல்! அவாக்கள் அறும்போது முதலில் இலக்கியத்தி லும் பின்னர் அதையும் கடந்த ஆன்மிகத்திலும் மனித மனம் ஈடுபாடுகளைத் தேடுவது இயற்கை. முதிர்ச்சியின் வளர்ச்சி யின் முத்திரை இது. அண்மைக் காலத்தில் கவி.கா.மு. ஷெரிப் சீருப்புராணச் சொற்பொழிவுகளில் செறிந்திருப்பது நாடு செய்த நற்றவம்; தமிழ் செய்த தவப்பயன். அதன்