பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 குனைன் கிராமத்தில் மழை பொய்த்ததை வைத்து, பஞ்சம் படுத்தும் பாடுகளையெல்லாம் பாடல்களாக்கியுள்ளார் உமறுப் புலவர். கருங்கடல் நீரையுண் டெழுந்து கார்க்குலம் பெருந்தரை யெங்ஙணும் பெய்த லில்லையால் இருந்தபைங் கூழெலாங் கருகி யெங்ஙணும் பரந்தது சிறுவிலைப் பஞ்ச மென்பதே! இப்பாடல் "விசும்பிற்றுளி வீழினல்லான் மற்றாங்கே, பசும் புற்றலை காண்பரிது" என்னும் வள்ளுவர் வாக்கிற்கு விளக்கம் போல் திகழக் காண்கின்றோம். பஞ்சத்தைப் பற்றிப் பதினாறு பாடல்கள் உமறு பாடியுள்ளார். அனைத்தும் அரிய கவிதை முத்துக்கள். குனைன் பகுதியைப் பஞ்சம் முறையின்றி அர சோச்சியதாம், இதனை; குலமுறை மன்னர்போய்க் கொடிய பாதகர் தலைநிலம் புரந்திடும் தகைமை போலவே என்கிறார் உமறு. . 'வழங்கு மேலவரையும் தரித்திரம் பிடித்திட்ட சரமகாலம்' என்று இன்னொரு பாட்டில் சுட்டுகிறார். காய், இலை, கிழங்குகளை எல்லாம் கருவறுத்து, மேய்கின்ற விலங்கினங்களையெல்லாம் கொன்று, மென்று தின்ற பின்ன ரும் தீராத பிணி, பஞ்சம் என்னும் பிணி என்று வேறு ஒரு பாட்டில் விளம்புகிறார். நலந்தரும் கற்பெனும் நாமம் கெட்டு, உடல் உலர்ந்து, பசியினால் ஒடுங்கி, ஈனர்தம் மனைதொறும் புகுந்து, இரந்து, இடைந்து வாடி, கற்பை இழந்தும்,பசி அகலாமல் பெண்கள் அவதியுறும் காலம் பஞ்சகாலம் என்கிறார் உமறு பிறிதோர் பாட்டில். சீ.பு.-3