5 பயன்களுள் ஒன்றாக உருவாகியிருப்பதே இந்நூல். இதன் வாயிலாகக் கவி கா.மு.ஷெரிப் அவர்களைக் 'கேளாதாரும் கேட்டுப் பயன் பெற இயலும். 1980- இல் புதுவை வானொலி வாயிலாகக் கவிஞர் 31 நாட்கள் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பே 191பக்கங்களுடைய இந்தப் புத்தகம் — புதிய அகம்! 'உரை' என்பதற்குரிய பேச்சு, உரைநடை, விளக்கம் என்ற முப்பொருளுக்கும் உரைகல்லாய் ஒளிர்கின்றது 'சீருப் புராண(ச்) சொற்பொழிவு'- பல்வகை அடைகளும் பெற்றுப் பெற்றுப் பெருமை பெறும் பெருந்தமிழ் இன்று 'உலகத்தமிழ்' என்ற உயர்வும் பெற்றுள்ளது. இந்த உயர்வுக்கு வெளிநாட்டி லிருந்து வந்த இத்தாலி நாட்டுச் சேசுசபைத் துறவியர் பெரு மகனார் வீரமாமுனிவர் (1680-1747) அவர்களும் அவருக்கும் (சற்று) முன் தமிழ்நாட்டிலேயே தோன்றிய (1665), தமிழர் உமறுப்புலவருமே ஆவர். முன்ன வராகிய பின்ன வர் 1726-லும் பின்னவராகிய முன்னவர் 17)5-லும் முறையே தேம்பாவணியையும் சீறாப்புராணத்தையும் இயற் றினர் என்பர். இக்காலக் குறிப்பினின்றும் உமறுப்புலவரின் சீருப்புராணமே கொங்கு வேளிர், திருத்தக்க தேவர், கவிச்சக்கரவர்த்தி கம்பர் போன்றவர்களால் இந்தியத் தமிழாக உயர்த்தப்பட்ட தொல்காப்பியத் தமிழகத் தமிழை உலகத் தமிழாக்க உதவியது எனலாம். அம்முயற்சிக்கு 'அடுத்து ஊன்றும் ஆள்' ஆக உறுதுணை புரிந்து உச்சகட்டத் திற்கு உயர உதவியனவே வீரமாமுனிவரின் தேம்பாவணியும் அவர்தம் 1730-ஆம் ஆண்டுத் திருக்குறள் இலத்தீன் மொழி பெயர்ப்பும். இந்நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியம் அராபிக் பர்சியன் உருது துறைகள் இணைந்து 'தமிழ் நூல் களிலும் தமிழர் வாழ்விலும் இந்து-முஸ்லிம் ஒருமைப்பாடு' குறித்துக் கருத்தரங்கு நடத்தும் வேளையில், உலகத்தமிழ் 5-வது மாநாடு அணுகும் வாரத்தில் கவி கா.மு. ஷெரிப்பின்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/6
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை