8 00 இருபத்து ஐந்தாம் வயதில் தமது வளர்ப்புத் தந்தை யும் பெரிய தந்தையுமான அபூத்தாலிப் அவர்களை தாயகத் திருமேனி அவர்கள் சந்தித்துச் சில சொற்கள் பகர்கின்றார்கள். இதனைக் கூறுகின்ற உமறுப்புலவர், முகம்மதின் அழகு பூத்த வாய் திறந்து உரைக்கலுற்றார் என்பார். குடித்தளப் பெருமை சேர்ந்த குலத்தினுக்கு உயர்ந்த மேன்மை படித்தலம் புகழுஞ் செங்கோல் பார்த்திவர் ஆதல் தேய்ந்து மிடித்தவர் பெரிய ராதல் மிகுபுகழ் கிடைத்தல் கையில் பிடித்திடும் பொருள தன்றிப் பிறிதில்லை உலகத்தன்றே! இப்பாட்டினையும், இதன்பின்னர் வருகின்ற பாட்டின் பொருளையும் கொண்ட சொற்களையும் எடுத்துரைத்து, வணிகக் கூட்டத்துடன் சிரியாநாடு சென்று தொழில் புரிந்து பொரு வீட்டி மீளத் தாம் கொண்டுள்ள நாட்டத்தைப் பெரிய தந்தை யாரிடம் உரைத்து, அவர்தம் கருத்தறிய விரும்புகின்றார்கள் நாயகத் திருமேனி அவர்கள். பொருளின்றி இவ்வுலகில் எதுவும் நடக்காது, நடத்தவும் இயலாதென்பதைக் கூறுகின்ற மகன், தொழில் புரியவும் பொருள் வேண்டும் என்பதைப் புரியாதிருக்கின்றரே என அபூத்தாலிப் நினைந்தார் போலும்! ஆனால், ""பணம் இல்லையே வணிகம் புரிய” என்று கூறினால், மகனின் ஆர்வம் குன்றி விடுமே என அஞ்சியோ என்னவோ, வணிகம் புரிய முதல் தந்துதவும் நல்லாரைச் சொல்லவிழைகின்றார். எனினும் எடுத்த எடுப்பில் உதவுவோரின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்தம் குண இயல்பினைக் கூறுகின்றார். முடிவில் பெயரைக்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை