62 படவே செய்யும். வணிகக்கூட்டம் மக்கமா நகரிலிருந்து சிரியா நாடு நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது. பிற்காலத்தில் பெருமானார் (சல்) அவர்களை எதிர்த்துப் பகைப்பவன் அபுஜஹில் என்பதனை இப்பயணத்தின் முதல் தினத்திலேயே அறிமுகம் செய்து விடுகின்றார் உமறுப்புலவர். இது மட்டுமின்றி, நபிப்பட்டம் அருளப்பட்ட அடிநாளிலிருந்தே முழுநம்பிக்கையுடன் நபிகள் நாயகம் அவர்களை நம்பிக்கை யுடன் பின்பற்றி ஒழுகும் நன்மனத்தராகிய அபூபக்கர் சித்திக் அவர்களையும் அறிமுகம் செய்து விடுகின்றர். இந்த அறிமுகம் நடந்தேறுவதற்கு அடிப்படையாக, தலைமை தாங்கும் போட்டி ஒன்று நிகழ்கின்றது. ஆம். செல்லுகின்ற வணிகக் குழுவிற்குத் தலைவராக பெருமானார் அவர்களின் பெயரை அபூபக்கர் சித்தீக் அவர்கள் முன்மொழிகின்றார்கள். .....முன்னிலை எவரென விளம்பினர். அவரோடும் அடைந்த பேர்களில் முகம்மது முதலென அபூபக்கர் அறைந்தாரே. அதனை உடனே எதிர்த்த அபூஜஹில் “நானே தலைமை தாங்குவேன்; அத்தகுதி எனக்குத்தான் உண்டு" என ஆர்ப் பரிக்கின்றான். முகம்ம தென்றுரை கேட்டலு மபூஜஹில் மனத்திடை தடுமாறி மிகமு ளிந்தனன் இவர்தமை முன்னிலை விலக்குவ துனக்காகா திகழெ னப்பலர் கூறவுங் கேட்டிலன் இதற்கு முன்னிலை யானென் றகம கிழ்ந்திட நடந்தனன் கெடுமதி யடைவது மறியானே. பெருமானார் அவர்கள் வணிகக் குழுவிற்குத் தலைமை தாங்க வேண்டுமென, பலரின் விருப்படிக்கு அபூபக்கர் சித்தீக் அவர்கள் இயம்பினார்கள். அவ்வுரையை மறுத்த அபூஜ ஹிலோ, "நானே தலைவன்" எனத் தனக்குத் தானே முன்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/63
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை