பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"64 அவர்கள் முன்னின்று நல்லடக்கம் செய்கின்றார்கள். அந்த ஞானியின் பெயர், புகைரு என்பதாம். புகைறவைப் பாடும் முகத்தான், நல்ல ஞானிகளின் தரத்தை, தன்மையை ஆழ்ந்த அறிவை, மேன்மைக் குணத்தைப் பாடல்களாகப் படைத்து வழங்குகின்றார் உமறுப்புலவர். பல்வித நூலிற் றேர்ந்து பலசம யங்களரகச் செல்வழி யனைத்து நோக்கிச் சென்றுமட் டறுத்துத் தேறி கல்பினி விருத்தி மாறக் கதிப்பதி சேர்க்குந்தூவு நல்வழி தெரிந்து காண நடுவெடுத் துரைக்கு கரவான் அறிவுநல் லொழுக்கம் வாய்மை யள்புறும் இரக்க மிக்கப் பொறைதவங் குணவ ணக்கம் பொருவி லாசார மேன்மைத் திறநிறை யருள்கள் மானந் தேர்ச்சியில் தேர்ந்த கல்வி குறைவறாப் பெருகி நாளுங் குடிபுகுந் திருந்த நெஞ்சாள் இத்தகு சிறந்த ஞானியின் நல்லுடலை, மண்ணில் சேர்த்த பின் பெருமானார் அவர்கள் தலைமையில் அவ்வணிகக்குழு மேலும் செல்கின்றது சிரியாவை நோக்கி.