பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 பெயர், குலம் ஆகியவற்றை உரையுங்கள் என அன்பொழுகக் கேட்டார். அந்த ஞானியின் கேள்விக்குப் பதிலாக, தமது மூன்று தலைமுறைக்கு முன்பிருந்து துவக்கி, தம் பெயரையும் உரைத்தார்கள் நல்லருள் நாயகம் அவர்கள். கேட்ட அந்த ஞானி நீங்கள் தான் இவ்வுலகத்தைத் திருத்த வந்த உத்தம நபி, இறுதி நபி என்றியம்பி மகிழ்ந்தார். அதுனான்கிளை, ஹாஷிம்குலம், அமரும்பதி மக்கம் பிதிராநிலை அபுத்தாலிபு பிள்னோரபு துல்லா சுதனாம்முகம் மதுகான்எனச் சொன்னார்மறை வல்லோன் இதமாகிய நபியாம்என இசைத்தான்மனம் மகிழ்ந்தான் நல்லோர்களை நல்லோரே அறிகுவர் என்றபடி, நபிகள் நாயகம் அவர்களை, நபி எனக் கண்டுரைத்து மகிழ்ந்தார் அந்த ஞானி என்பது மேலே உள்ள பாட்டின் பொருள். இதன்பின் இவர்தான் நாம் தேடி வந்த நல்லார் என அறிந்த கணக்கர் மைசறா, கதிஜாப் பிராட்டியாரின் கனவினைக்கூறிப் பலன் கேட்டார். அந்த ஞானவானிடம் குவைலிது எனும் எனது நண்பரின் மகள் கண்ட கனவின் பலன், இந்த நபிகள் நாயகம் அவர்களை மணம்புரிந்து வாழ்வார்கள் என்பதுதான். இது நடக்கும். இணையிலாச் சிறப்புடன் கதீஜா வாழ்வார்கள். அவர்கட்கு எனது நல்வாழ்த்து, என்று கூறினார் அந்த ஞானியார். அவர் கூற்றையும், அதுவரை நபிகள் நாயகம்பால் தாம் கண்ட அரிய பண்புகளையும் நிருபமாக்கி, விரைந்து செல்லும் புரவியோட்டுகின்ற ஒரு ஏவலன்வசம் ஈந்து, மக்க மாநகரில் உள்ள கதீஜாப் பிராட்டியாருக்கு அனுப்பினார் கணக்கர் மைசரு. மறைதெரி அறியவன் உரைத்தசொல் கேட்டு மைசறா மனம்மிக மகிழ்ந்து நிறைபதி தளைவிட்டு இற்றைநாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உளது அனைத்தும்