பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீறாப்புராணச் சொற்பொழிவு' நூல்வடிவில் வெளிவரல் கடவுட் செயல் அல்லாமல் வேறென்றும் இல்லை! கவிஞர் தமது வானொலிப் பேச்சுகள் முப்பத்தொன்றிலும் சீறாப்புராணத்தின் செய்திகளையும் சிறப்புகளையும் மணிமிடை பவளம் போல் உமறுப்புலவரின் உயரிய கவிதைகளோடு தம் உரைநடை விளக்கங்களையும் இணைத்தும் பிணைத்தும் இயற்றி யுள்ள இந்நூல் தமிழ் இளைஞர்களும் தமிழ் முதியோர்களும் ஒருசேரப் படித்துப் பயன்பெறத் தக்கதாகும். சிறப்பாகப் +2 மாணவர்கள் இளங்கலை மாணவர்கள் படித்துப் பயன் பெறத் தக்கதாகும். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாளைக்கு ஒன்றாகப் படித் துப் பயன் கொள்ளத்தக்க வகையில் சீறாப்புராணம் பற்றி ஒரு நூல் இல்லாக் குறையை அல்லாவின் அருளால் கவி கா. மு.ஷெரிப் தமக்கே உரிய தனியாற்றலுடன் நிறைவேற்றி யிருப்பது நாம் செய்த நற்பேறாகும். புகுமுக உத்தமர் உமறுப் புலவர் எட்டயபுரம் மண்ணில் வளர்ந்த வர், வாழ்ந்தவர், அமரவாழ்வு அடைந்தவர். இந்த உண்மையை மகாகவி பாரதியின் நூற்றாண்டின் ஆண்டில் நுழையும் நாம் நினைந்து மகிழ்தல் பொருத்தமே ஆகும். தமிழ் மண்ணின் எந்த ஒரு சிறு பகுதிக்கும் துரோகப் பழி இருக்கக் கூடாது என்று இறைவன் திருவுள்ளம் வைத்த தால்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மட்டுமே எட்டய புரமண்ணில் பிறந்தார் என்று இதுவரை பலரும் எண்ணி வந்த னர். கடிகைழுத்துப் புலவரும் அவர் தம் மாணாக்கராகிய உமறுப் புலவரும் பண்பாடிப் பண்படுத்திய மண்தான் எட்டய புரம் என்பது இப்போது எவருக்கும் தெளிவாகும். ஒருவேளை இதுவே மகாகவி பாரதியார் 'சமையந்தொறும் நின்றதையல் ஆகிய தமிழ்த்தாயின் மணிவயிற்றிற் பிறந்த இந்துமாக் கவி ஞருள் - மறுமலர்ச்சித் தமிழ்க் கவிஞருள்- முன்னோடியாக அல்லாவின் புகழைப் பாட்டிலும் கீர்த்தனையிலும் 'இஸ்லாமின் ..