70 துயருள் ஆழ்ந்தார்கள். மனம் தூக்கத்தைக் கொன்றது. நொந்து வாடிய கதீஜாப் பிராட்டியார் எதிரில் பணிப்பெண் தோன்றினாள்; மைசறா அனுப்பிய லிகிதம் என ஈந்து மறைத் தாள். பெற்ற லிகிதத்தின் முத்திரையை நீக்கி, விரித்துப்படித் தார்கள், முகம்மது எனும் பெயரினைக் கண்ணுறும் போதெல் லாம் கண்களில் ஒற்றி மகிழ்ந்தார்கள். வந்து கொண்டிருக் கிறார் முகம்மது எனும் வாசகம் அவர்கட்குத் தேனாகப் பாகாகச் செந்தமிழ்ச் சொல்லாக இனித்தது. மகனைப் பிரித்து வருந்திக் கொண்டிருக்கும் அபூத்தாலியும் மகிழட்டும் என, அவ்வரிய லிகிதத்தை அனுப்பி வைத்தார்கள். அவரும் படித்து உயிர் பெற்ற உடலென உய்த்தெழுந்து அகம் நிறை ஆனந்தம் கொண்டார். மதியை எதிர்பார்க்கும் மலர்களாகக் கதீஜாப் பிராட்டியாரும், அபூத்தாலிபும் நாயகத்திருமேனி யார் வரவுக்குக் காத்திருந்தனர். தரு நிகர் கரத்துஅபூத்தாலிப் ஆகிய குரிசி லும்கதீ ஜாவெனும் கோதையும் வரும் மதிக்கு இன்புறும் மலர்கள் ஒப்பௌ இருவரும் உவகையில் களித்து இருந்தனர் என்று பாடி, கதீஜா|கனவு கண்ட படலத்தை முடிக்கின்ஞர் உமறுப் புலவர். இதனை அடுத்து வருவது, மணம் பொருத்து படலம். பின்னர் மணம்புரிபடலம்; சுவையான விருந்து.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/71
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை