பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 என்றும், "தெண்டிரைப்புவனம் ஏழும்சேர்ந்தபொன் உலகம்எட்டும் கொண்டுதன் நேமிஒன்றால் கொற்றவெண் குடையுள்ஆக்கி வண்டணிதுதையும் தண்தார்முகம்மதே புரப்பர்தேனும் கண்டும் ஒத்தனைய சொல்லாய்க்காண்பது திண்ணம்" " என்று மொழிந்து, இதற்குமேல் தெரிய வேண்டுமாயின், நான் எழுதி அனுப்பிய லிகிதத்திலே முழுவிவரமும் குறித்துள்ளேன். கண்டுகொள்க எனவும் புகன்ற மைசறா சென்ற பின்னர், அவர் செப்பிய மொழிகளில் எண்ணத்தைச் செலுத்தி, இன்புற்றார் கள் கதீஜாப் பிராட்டியார், நபிகள் நாயகம் அவர்களைத் தம் மணாளராக வரித்துவிட்டது கதீஜாப் பிராட்டியாரின் எழிலார் இதயம். தம் இதயம் ஏற்று மகிழ்கின்ற இன் நினைப்பை, எப்படி நிறைவேற்றுவது? யார் நிறைவேற்றித் தருவது? கதீஜாப் பிராட்டியாருக்குத் தந்தை உண்டு. வயது முதிர்ந்த வள்ளல் குவைலிது என்பது அவர் தம் பெயர். அவர் அறிந்தால் நடைபெறலாம். அவரிடம் யார் இயம்புவது? 10களே தந்தையிடம் சென்று, இன்னாரை எனக்கு மணவாள ராக ஆக்கித் தாருங்கள் என்று கேட்க முடியுமா? கேட்பது முறையா?... கவலைப் பெருக்கு ஊற்றகத் தோன்றி, நதியாகப் பெருகி, கடலாக மாறி, துன்பு அலைகளை எழுப்பி,தொல்லைக் குள் ஆக்கிற்று கதீஜாப் பிராட்டியாரை. என்கிறார் உமறுப் புலவர். கனிதுயர்ஊறு தொட்டுநதிப்பெருக் காகிப்பின்னும்

கனைகடல் விரிவ தாக்கிக்கதித்தெழப் பெருக்கிற்றன்றே! இது உமறு தரும் உயர் வாசகம். ஒரு பெண்ணின் மனத் தெழுந்து வியாபித்து நிற்கும் துயரினை இதைவிட எப்படி உவ மானித் துரைப்பது? தம் துயரினை, துன்பத்தை, வேட்கையை, அதிலும், திருமண ஆசையை மகள், தன் தந்தையிடம் கூற இயலாது தான். ஆனால் வேறு வழி?