74 தந்துள்ளது. எனவே, அவர்கட்கு யாரும் பெண்தர முன்வர லாம். அப்படி நடந்துவிட்டால்? அன்பாலும்,ஆசையாலும், அடக்கொண்ணா அவசரத்தாலும் தூண்டப்பெற்ற கதீஜாப் பிராட்டியார், மதிநுட்பம் உடைய கணக்கர் மைசறாவை அழைத்தார்கள். அழைத்து, ஆமாம், ஏன் இன்னும் நபிகள் நாயகம் அவர்கள் திருமணம் புரிந்து கொள்ளாதிருக் கின்றார்கள்? எனக் கேட்டார்கள். இக்கேள்வியை, தம் கணக் கரிடம், எஐமானி கேட்கின்ற தன்மையில் அதிகாரத்துடன் கேட்கவில்லையாம் கதீஜாப் பிராட்டியார். அரும் புகழ் மைசறாவை அழைத்து, அருகிருத்தி, நெஞ்சில் விரும்பிய உவலக்கூரக் காரணவேந்தர்க்கு, அன்பாய்ப் பெரும்புவி மணத்தின்கோலம் பெற்றிலாது என்கொல் என்று கின்றார். கேட்டார்கள் என்பதாக உமறுப் புலவர் உரைக் திடீரென்று தம்முன் இப்படி ஒரு கேள்வி வரும் என்று மைசறா எதிர்பார்க்கவில்லை. எனவே, பதில் கூறுவதில் சிறு தயக்கம். பின்னர் அவர் இக் கேள்வி ஏன் எழுகின்றது என்பதை யூகித்தறிந்து கொள்கின்றார். எனினும், பொதுவாக, முதியோர் உரைக்கின்ற தத்துவத்தையே அவர் புகல்கின்றார். சுருக்கமாகச் சொல்லப்புகின், மைசற உரைத்தது, "எந்தக். காரியமும், நாம் நினைத்தபடி முடிகின்றதா? இறைவன் விதித்தபடிதாளே நடக்கும்?” என்பதேயாம். தேறியகரணம் போகம்செழும்புவி யாக்கைபோல ஊறியஊழின் அன்றிமுடியுமோ உலகத்தில் என்றான். மைசறாவின் உரையை இவ்வரிய கவிதை வரிகளில் நிறைத்துக்காட்டுகின்றார் உமறு. இதன் பின்னர், அறிவார்ந்த கதீஜா எதுவும் கூறளில்லை. மைசற சென்று விடுகின்றார். ஆனால், மைசருவின். கடமை அத்துடன் தீர்ந்துவிடவில்லை. கேள்வியின் உட்பொருளை உணர்ந்த அவர், நபிகள் நாயகம். அவர்களைச். சென் று காண்கின்றார். கண்டு, தம்மிடம்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/75
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை