79 மேலோர்களின் அரிய தவமாகவும், எமது இனத்தார் களின் ஆருயிராகவும் உள்ள மேன்மைமிக்கோய்! எனது அண்ணன் அப்துல்லாவின் மகனார் நபிகள் நாயகம் அவர் களின் திருமணம் முடியும்வகை காணவந்தேன் என்று கூறு கின்ற ஹம்சா, அருமருந்தாகவும் உள்ளவர்கள் நபிகள் நாயகம் என்றும் புகல்கின்றார். ஆனால் மேலோரின் அருந்த வமாய், எம்மினத்தவரின் ஆகுயிராய் என்றற் போன்று அகுமருந்தென்றதற்கு அடைமொழி கூட்டவில்லை. உலக மக்களின் பவப்பிணி தீர்க்கும் அருமருந்தாய் உதித்தவர்கள் நபிகள் நாயகம் அவர்கள். இந்த உயரிய அடைமொழியைச் சுட்டவில்லை. இங்கே அதைச் சுட்ட வேண்டிய அவசியமும் இல்லை. கதீஜாப் பிராட்டியாரின் உள்ளத்துற்ற ஆசைப் பிணிக்கு, அருமருந்தாய் என்று குறித்திருக்கலாம். அப்படிக் கூறுவது பண்பன்று ஆகலான், பொதுவாக அருமந்தென உரைத்து, இந்த அருமருந்தை அடையும் பேறு எவருக்கு உளதோ எனும் ஆசையைத் தோற்றுவிக்கும் தன்மையிலே ஹம்சா அடைமொழி கூட்டாது அருமருந்தென்கின்றார். பாத் திரங்களைப் பேசவைப்போன் கவிஞன். ஆனால், அந்தப் பாத்திரமாகப் பேசுவதும் கவிஞனே! உயரிய கவிஞன். பால் படாத பாத்திரங்கள் ஓட்டைப் பாத்திரங்களாகி விடுவது இயல்பு. தாம் படைக்கின்ற பாத்திரங்களால் உயர் வடைகின்றான் கவிஞன். இங்கே ஹம்சாவின் பேச்சுத்திறம், உமறுப்புலவரை உயர்புலவராக உயர்த்திக்காண்பிக்கக் காண் கின்றோம். ஹம்சா, நபிகள் நாயகம் அவர்களை அருமருந்து எனச் சுட்டியதோடு அமையவில்லை. அந்த அருமருந்தை அடை கின்ற பேறு யாருக்குக் கிட்டியுளதோ என்று கருதுமாறும் பேசுகின்றார். ஆம், இந்த மக்கமா நகரில், பொன் அனைய பெண்களை ஈன்றுவக்கும் மதிப்பிற்குரியாரெல்லாம், தம் தம் கன்னியசை எமதருங் குரிசிலுக்குத் தருவதாக வலிய வந்துரைக்கின்றனர்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/80
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை