பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 முரசறைவோன், ஒட்டகத்தின்மீது முரசமேற்றி, மாநகர்கு ஈத்தான் மணம். "ஒட்டை மீதினில் மணமுரசினை எடுத் துயர்த்தி, பாசமுற்றவர்க் குரைப்பதுண்டெனப் பகர்ந்திடு வான்' என்பது உமறுவின் வாக்கு. யானை எருத்தத்து முரசேற்றி, பறைசாற்றி, திருமணச் செய்தியைச் செப்புவது, தமிழகத்தில்-தமிழ்க்காப்பியங்களில் நிகழ்வது. அரபு நாட்டில் யானைகளில்லை. ஒட்டகம் முரசு சுமந்து வீதி வலம் வருகின்றது. அண்ணலாரின் திருமணம் அறிவிக்கப்படுகின்றது. தமிழ்க் காப்பியங்களில், சீறாப்புராணத்தில், உள்ளது போன்று மணம் பொருத்து படலம் விரிவாக இல்லை.இல்லாக் குறையை நிறைவு செய்கின்றார் உமறு. இது, தமிழிற்கு இஸ்லாம் நல்கிய ஏற்றமிகு பரிசு, இன்பப் பரிசு எனலாம். அடுத்து வருவது மணம்புரி படலம்.