சீருப்புராணத்தில் 12 உள்ள மணம்புரிபடலம், நபிகள் நாயகம் அவர்கட்கும் கதிஜாப்பிராட்டியாருக்கும் நடந்த திரு மணம்பற்றி விரித்துரைப்பது. செல்வச் செழிப்புடைய குடும் பத் திருமணம். எனவே, தெருவை அடைத்துப் பந்தல் போடுவதென்பார்களே, அதையும் விஞ்சி,ஊரை அடைத்துப் பந்தல் போடப்பட்டதென உமறு பாடியுள்ளார். பந்தலைக் காவணம் என்று சொல்லுவது செட்டிநாட்டினை ஒட்டியுள்ள பகுதிகளில் பேச்சு வழக்கில் இன்றும் உளது. இந்தச் சொல்லை உமறுப்புலவர் கையாண்டிருக்கக் காண்கின்றோம். திருமணம் போன்ற நற்காரியங்கட்கு இடப்படுகின்ற பந்தலையே காவணம் என்றியம்புவது இன்றுள்ள வழக்கு. உமறுப்புலவர் காலத்தில், வேறு காரியங்கட்காக இடப்படுகின்ற பந்தலையும் கூடக் காவணம் என்றே மக்கள் சுட்டியிருக்க வேண்டும். எனவே, கதீஜாப்பியாட்டியார் திருமணத்திற்குப் போடப்பட்ட பந்தலை, வெறுமனே, காவணம் என்று குறிக்காமல், திருக் காவணம் என உமறுப்புலவர் சுட்டக் காணுகின்றோம். "இடன் அறத் திருக்காவணம் நிரை நிரைத்திடுவார்" என்றிருப்பது காண்க. இன்னும் இக்காவணத்தை அழகு பெறச் சித்திர வேலைப்பாடுகளமைந்த துணிகளைக் கொண்டு அலங்கரித்ததையும், தோரணங்கள் கட்டிய பாங்குகளையும் இதர அலங்காரங்களையும் மிக விரிவாகக் கூறுகின்றார் உமறுப் புலவர். இடன் அறத் திருக் காவணம் நிரைநிறைத்திடுவார் கடலையுள்ளறமகரதோ ரணம்பல நடுவார் விடுசு டர்ப்படம் எடுத்துயர் வெளியடைத்திடுவார் குடுமிமாடத்தில் அணியணிக் கொடித்திரள் கடுவார்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/84
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை