பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 மகிழக் காவியம் படைத்துள்ளார் உமறுப்புலவர் எனக் கொள் ளச் செய்கின்றது. இதில் ஒரு சிறு குறை. கதிஜாப் பிராட்டி யார் திருமணம் நடந்தேறுவதை உரைக்கின்ற மணம்புரி படலத்தில், கண்ணிற்கும், கருத்திற்கும், செவிக்கும் இன்பம் பயக்கின்ற தன்மையில் கவிதை படைத்தளித்துள்ள உமறுப் புலவர், உடலுக்கு ஊட்டமளிக்கின்ற உணவு விருந்து நடந்த தாக உரைத்தாரில்லை. இக் குறையை உணர்ந்து, நிறைவு செய்வதே போன்று, நபிகள் நாயகம் அவர்களின் அன்புப் புதல்வியரான பாத்திமா நாயகியாரின் திருமணத்தில் விருந்து நடத்தி மகிழ்விக்கின்ஞர் அவர், கதீஜாப் பிராட்டியார், நபிகள் நாயகம் ஆகிய இருவருக் கும் நடந்த திருமணத்திற்கு வீடுகளும், வீதிகளும், நகரமும் ஏழு நாட்கள் அலங்கரிக்கப்பட்டன என்று விரித்துப் பாடி யுள்ள உமறுப்புலவர், திருமணம் நடந்தேறிய விதத்தை ஒரே ஒரு பாடலில் கூறி விடுகின்றார். இது, இஸ்லாமியர் திருமண முறை வெகு அருக்கமாகவும் எளிதாகவும் நடைபெறுகின்ற ஒன்று என்பதை உணர்த்துவதாய் உளது. முதியவர் உவந்துநீதிமுன் மார்க்க முறைப்படி சடங்குகள் முடிப்ப மதிவலன் குவைலிது அகம்மகிழ்ந் தெழுந்து முகம்மதின் செழுமணிக் கரத்தில் புதுமதி வதனச்செழுங்கொடிக் கதீஜா பொன்மலர்க் கரத்தினைச் சேர்த்திக் கதிர்மதியுளநான் வாழ்கவென் றிசைத்துக் கண்களித் தினிதுவாழ்த் திளரே -என்பார் உமறுப்புலவர் தபிகள் நாயகம் அவர்களின் திருமணம் நடந்தேறியவிதம் பற்றிப் பேசுகின்ற மணம் புரி படலத்தின் சிறப்பினை இது காறும் நுகர்ந்தோம்.