8 கவிஞன், தான் எதை விளக்க நினைக்கின்றானோ, அது அதுவாகவே அமையும் பேறுதான் வெற்றி பெற்றவனா கின்றான். (பக்.52) கற்பனை ஆண் இஸ்லாமியப் புலவர்கட்கு இயற்கையைக் கண்டால் ஒரே ஆனந்தம்! காரணம், மற்றெதையும் யாகவோ, கற்பனை கலந்தோ பாடுகின்ற வாய்ப்பு இஸ்லாமியப் புலவர்க்கு அடியோடு இல்லை. உள்ளதை உள்ளவாறே பாடவேண்டும். பெண்களையோ களையோ அங்க வருணனை செய்ய அனுமதியில்லை. எனவே, இயற்கையின் பால் வரும்போது, ஆனந்தப் பேருந்தலுக்காளாகி விடுகின்றார்கள். ஆகவே இஸ்லா மியப் புலவர்களிடையே இயற்கையை வருணிக்கின்ற திறம் சற்றே கூடுதல் எனலாம். (பக். 56) இதில் உள்ள தனிச் சிறப்பு, தலைவியின் உடலழகை உரைக்காமல், உள்ளத்தழகை, குணமேம்பாட்டழகை விவரிப்பதாம். இத்தன்மை தமிழ்க் காப்பிய உலகின் புதுமைச் சிறப்பென்றே சொல்ல வேண்டும். இஸ்லாமியம் தந்த ஏற்றமிகு தனிச்சிறப்பெனக் கூறுவதும்பொருந்தும். (பக். 69) இதனைச் சொல்லப் போந்த உமறுப்புலவர், மனமகிழ் வும், மனக்களிப்பும், மடுங்குவர என்றும், மறுகுமணீ மறுகூடு மறுகாது சென்றார் என்றும் சொற்பெய்துள்ள நயம், சிறப்பிற்குரியதாம். மற்றும் திருமண வீட்டில் இசைநாதம் எழுவது போன்று, பாடலில், நடைநாதம் ததும்புமாறு செய்துள்ளதும் திரும்பத் திரும்பப்பாடி மகிழத்தக்கதாம். (பக். 78) பாத்திரங்களைப் பேசவைப்போன் கவிஞன். ஆனால் அந்தப் பாத்திரமாகப் பேசுவதும் கவிஞனே! உயரிய
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை