பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நபிகள் நாயகம் அவர்கள், ஈராண்டுக் காலம், ஹிரர் மலைக் குகையில், தனித்தும் விழித்தும் பசித்தும் இருந்து அறிந்து வந்த, உருவமற்ற இறைவனே இறைவனென்பதை யும், அவ் விறையவனின் உண்மைத் தூதர் முகம்மதென்பதை யும், முதன் முதலில் மனப்பூர்வமாக ஏற்று இஸ்லாம் ஆனவர் கள், நபிகள் நாயகம் அவர்களின் மனைவியரான கதீஜாப் பிராட்டியார் தாம். இஸ்லாம் என்றால் என்ன என்பதை உமறு இங்கே ஒரு கவியால் உரைக்கின்றார். ஒருத்தன் நாயகன்அவனுக்கு உரியதூதெனும் அருத்தமே உரைகலிமா, அள்நிண்ணயப் பொருத்தம் ஈமான்நடைபுனை தலாம்அமல் திருத்தமே இவையிசுலாமில் சேர்தலே! . ஒருவனே இறைவன். இந்த உண்மை நெறியை எடுத்தியம்பி, மனித குலத்தை ஒற்றுமைப் படுத்த வந்த சத்குரு முகம்மது எனும் பெயருக்குரிய நபிகள் நாயகம் அவர்கள். இதனைச். செப்புகின்ற திருமந்திரமே கலிமா என்னும் இஸ்லாமிய மூலமந்திரம். இதை நெஞ்சில் ஏற்று, உறுதிப்பாட்டுடன் ஒழுகுவதே ஈமான் என்பது. இந்த நெறியில் சிறிதும் மாற்ற மின்றி நேர்வழியில் நடப்பதே இஸ்லாம் ஆகும். இதனை மேலே கண்ட உமறுவின் பாட்டு உணர்வு ததும்ப உரைக் கின்றது. நேர்வழியில் நடத்தல் என்பதானது, பல தெய்வ வணக்கத்தை நீங்கி, உருவமற்ற ஓரிறைவனை உறுதியுடன் ஏற்று, மனிதரில் தாழ்வுயர்வுகளை அகற்றி, அறவழி சார்ந்து, அறிவு வழிப்பட்ட அருள்மய வாழ்வு வாழ்வதென்பதாம். இதனை, வெளிப்படையாக மக்களிடையே எடுத்தியம்பிய போது, எதிர்ப்புத் தோன்றிற்று. எதிர்த்த கூட்டத்தின் தலைவன் பெயர் அபுஜஹில். இவன், அறிவாளி, ஆற்றல் மிக்கவன், செல்வச் சீமான், செல்வாக்கு மிக்கவன். ஆனால் சொல்லுகின்ற விஷயம் என்ன எனச் சிந்திக்காமல், சொல்லு, கின்றவர் யார் என்பதில் தன் அறிவைச் செலுத்தியவன்.