பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுதிப் பாட்டினை விளக்கி சொற்கள். ஆம், 92 உரைக்கின்ற உறுதியான சூரியனையும் சந்திரனையும் கொணர்ந்து, எனக்குப் பரி சாகத் தந்திடினும், இந்த மாநிலத்தில் உறைகின்ற எல்லா மானிடரும் அபுஜஹிலின் சொல்லிற்கிணங்கி எனக்கு இடர் பல விளைத்திடினும், மானுடர் மேன்பட, இறைவன் ஈந்துள்ள வேத நெறியை மக்களிடம் எடுத்து இயம்புவதிலிருந்து நான் விடுபட மாட்டேன். என்னை அவ்வுயர் நெறியினின்றும் விலக்கி விட இறைவனை அன்றி வேறு எவராலும் இயலாது. அதட்டலுக்கும், மிரட்டலுக்கும், அச்சுறுத்துதலுக்கும், அடி உதைகளுக்கும் அஞ்சுவது இறைத் தூதர்களின் செயலன்று. ஆசை வார்த்தைகளிலும் இறைத் தூதர்கள் மயங்க மாட்டார் கள் என நபிகள் நாயகம் அவர்கள் உரைத்த வாசகத்தை உள்ளடக்கியது மேலே உள்ள உமறு தரும் பாட்டு. இப்பாட்டு நல்லோர் உள்ளத்தை நயந்து பற்றுவதாகும். கொள்கை வழுவாதவனே மானுடரைத் திருத்துகின்ற மாமனிதன் என் பதை யாவர் நெஞ்சிலும் நிலைபெறச் செய்வதாகும். ஆனால், இவ்வுரை கேட்ட அபுஜஹில் திருந்தவில்லை. எதிர்ப்பைத் தீவிரமாக்கத் திட்டமிடுகின்றான்.