பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 இல்லை என எண்ணியவர் போன்று நின்றிருந்துவிட்டு, ஏசி மோர் ஏகிய பின்னரே, அவ்விடத்தைவிட்டகன்றார் முகம்மது' என அப்பெண் உரைத்த போதுதான் சீற்றம் அடைத்த சிங்கம் ஆகின்றார் ஹம்சா. உடனே அபுஜஹில் இருந்த இடம் நோக்கிப் பாய்ந்து செல்கின்றார், பெருங் கூட்டத்தின் மத்தி யிலே இருந்த அவனை நையப் புடைக்கின்றார். புடைத்துவிட்டு, 'நானும் என் அண்ணன் மகன் முகம்மதுடன் சேர்ந்து, அவர் இயம்புகின்ற உருவமற்ற ஓரிறைவனை ஏற்று, அக்கொள்கை யைப் பரப்புவதில் ஒருவனாகித் தொண்டாற்றப் போகிறேன். உன்னால் ஆனதைச் செய் பார்க்கலாம்!" என உரைத்து உடனே நபிகள் நாயகம் அவர்கள் இருந்த இடத்திற்கேகி, தீனுல் இஸ்லாத்தில் ஆகிவிடுகின்றர். கொடும் மனத்தாரின் செயல்கள் மூலமாகவே நன்மனத்தவர்கட்குப் பலம் கிட்டு கின்றது; கிட்டுமாறு செய்கின்றான் இறைவன் என்பதற்கு இந் நிகழ்ச்சி ஒரு சான்றாகின்றது. எம்பெருமானார் அவர்கள், கடைப் பிடித்த சாத்வீக நெறியை, அது நடந்த ஆயிரத்து நானூ ருண்டுகட்குப் பின்னரும் கூட, இவ்வுலகில் வியந்து உரைக்க காணுகின்றோம். இவ்வுலகம் உள்ளவரை இவ்வரிய நிகழ்ச் சியை, மக்கள் மறவாது நினைவில் கொண்டு எடுத்தியம்புவர் என்பதில் ஐயமில்லை. இந்த நிகழ்ச்சியை உமறுப்புலவர் தம் சீருப்புராணத்தில், கீழ்வரும் கவிதைகளினால் படம்பிடித்துக் காட்டுகின்றார். பழுதுஉறும் கொடிய மாற்றம் அபூஜகல் பகர்ந்தவெல்லாம் பொழில்கதிர்ப் பொருப்புத்திண்தோள் புரவலர்பொறுத்தார் என்ன வழுஅறு ஹம்சாகேட்டு மனத்தினுள் வேகம் மீறிக் குழுவொடும் திரண்டு வைகும் கொடியவன் இடத்தில் சார்ந்தார்.