பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 படிறபூஜஹிலென்றோதும் பாதகன்வதனம் நோக்கி அடல்முகம்மதுவைச் சொல்லாத அவமொழி பகர்ந்ததுந்த மிடல்? எனச்சிளந்து சீறி வீரவேல் தடக்கை வில்லால் உடைபடச் சிரத்தில்தாக்கி உறுக்கொடும் கறுத்துச்செல்வார் துனிமனத்துறைய முன்னோன் தோன்றலை யுரைத்தாய்என்னில், இனியவைஉரைப்பன்? யானும்மியல்நபி மொழிந்தமார்க்கம் தளில்நடுநிலைமை யானேன்சாதியில் தலைவர்கூடி நனிபகைவரினும் காண்பேண்காணுநீ நவில்தல் என்றார். மண்டை உடைபடுகின்ற இத்தகு வீர உரைகளையும், நிலையையும் நல்கி விட்டு ஹம்சா அவர்கள் நபிகள் நாயகம் அவர்களின் பால் சென்று, இறைவன் ஒருவனே, அவன் தம் இறுதி நபி முகம்மதே என்கின்ற இஸ்லாமிய மூலமந்திரத்தை ஓதி தீனுல் இஸ்லாத்தில் ஆகிவிட்டார். ஹம்சா நாயகத் திரு. மேனி அவர்களுடன் சேர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்த. அபுஜஹிலின் கூட்டத்தினர் துன்பம் உற்றர் என்பதனை, அறிவுறும் ஹம்சாதீனில் ஆயினர்என்னும் மாற்றம் மறுவுறை குபிரர்கேட்டு மளத்தினில் துன்பமுற்றார் என்று உமறுப் புலவரின் கவிதை முழங்குகின்றது. அதாவது, நல்லோரைப் பகைத்துத் தீயோர் செய்கின்ற தீச்செயல்கள், நல்லோருக்கு நன்மையாகவே முடிகின்றன. அபுஜஹில் நபிகள் நாயகம் அவர்களிடம் பேசியது அவன் தன் குணத்திற் கேற்ற இழியுரை. அதனைத் தாங்கிக் கொண்டது பெருமா னாரின் பொறை. ஹம்சா அபுஜஹில் முன்னம்புகன்றது வீரமிக் கச் சூளுரை. அவர்தம் சூளுரைக்கேற்பப் பாடலின் நடையும் அமைய, புலவர் உமர் பாடியிருப்பது தமிழ் இலக்கியத்திற் கோர் அழகிய செந்தாமரை. அபூஜஹில் என்பானை, நாயகத்திருமேனி அவர்கட்கு. எதிரியாக்கி, அவன் மூலம் இஸ்லாம் பரவ இறைவன் வழி வகுத்தான் என்பதே முஸ்லிம் பெரியோர்கள் கண்ட முடிவு.