பக்கம்:சீவகன் கதை.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9

      படைத்த தேவர் வருந்தினார்; தமது உண்மை நிலையை :
      உலகறியச் செய்ய உறுதி பூண்டார். பழுக்கக் காய்ச்சிய
      இரும்புத் தூணைப் பற்றி, 'என் துறவு மெய்யாயின், தீங்
      கின்றி ஒழிக!' என்றார் ; உய்ந்தார். மக்கள் உவந்தார்கள்.  
    இத்தகைய நல்ல துறவொழுக்கமும், இனிய கவி 
     பாடும் பெருநலமும், பிற சீலங்களும் ஒருங்கே வாய்க்கப்
     பெற்ற அண்ணலாரே சிந்தாமணியின் ஆசிரியர் திருத் 
     தக்க தேவர். இவர் அன்று எழுதிய அரும்பெருங்காப் 
     பியம் என்றும் நின் நிலவும் என்பது உண்மை ;  
     உறுதியுங்கூட. இன்பச் சுவை பெரி தும் நிறைந்த
     இலக்கியமென்றாராயினும், இ ல் தூய துறவற நெறியும், 
     வீரமும், பிற பண்புகளும் நன்கு பேசப்படுகின்றன.
     சீவகன் மனைவியர் பலரை மணந்து வாழ்ந்த மாபேரின்ப
     வாழ்வும், இறுதியில் அனைத்தையும் வெறுத்து அருக 
     தேவன் அடிகளைப் பற்றிய தூய துறவு நெறியும் அறிந்
     தறிந்து இன்புறற்பாலனவாகும். எனவே, இனி நூலுள்
     நுழைந்து, தேவர்தம் தித்திக்கும் வாக்கின் வழியே 
     சீவகன் வரலாற்றை அறியலாம் :
    ஏமாங்கத நாட்டு இயற்கை வளம்:
   'ஏமாங்கதமென்று இசையால் திசை போயது,'
    என்று திருத்தக்க தேவர் சீவகன் நாட்டைச் சிறப்பிக் 
    கின்றார். ஆம். அந்நாட்டின் புகழ் பலவிடங்களிலும்
    பரவியிருந்தது. அதன் இயற்கை வளமும் பிற சிறப்
    பியல்புகளும் கண்டார் கண்ணையும் கருத்தையும்ஒருங்கே
    கவர்வனவாய் அமைந்தன. அந்நாடு மழை வளம் தவறா
    நாடு. மழை வளம் தவறாத காரணத்தால் விளைவு வளம்
    பெருகும் ாடு. உண்ண உணவு பெருகும் நாட்டில்
    வாழும் மீக்களின் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டோ! 
    அவர் புகழும் பெயரும் எண்டிசையும் ஈடும் எடுப்புமின்றி
    விளங்கக் கேட்கவா வேண்டும்! சீவகன் முன்னோர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/10&oldid=1484097" இலிருந்து மீள்விக்கப்பட்டது